BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Sunday, 29 June 2014

இடிந்து விழுந்த கட்டிடத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார் தமிழக முதல்வர் !!


சென்னை போரூர் முகலிவாக்கம் கட்டிடம் நேற்று இடிந்து விழுந்து தரைமட்டமானது . கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி 12 பேர் பலியாயினர் .

சம்பவம் நடந்த இடத்தை தமிழக் முதல்வர் ஜெயலலிதா இன்று மாலை நேரில் சென்று ஆய்வு செய்தார் . மீட்பு பணிகளை பற்றி முதல்வர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார் . கட்டிடம் எவ்வாறு இடிந்தது என்றும் , அங்கே உள்ள பிரச்சினைகள் பற்றியும் கேட்டறிந்தார் .

இதன் பின் பத்திரிக்கையாளர்களிடம் அளித்த பேட்டியில் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டிருப்பதாகவும் , மீட்பு பணிகள் தொடர்ந்து நடப்பதாகவும் , காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் , விபத்து நடக்கும் போது கட்டிடத்தில் 72 பேர் இருந்தனர்  அவர்களில் 20 பேர் பெண்கள் எனவும் , காயம் அடைந்தவர்களின் உறவினர்களுக்கு தங்க இடமும் உணவும் அளித்து வருவதாகவும் , கட்டிடல் கட்டுவதில் தான் விதிமீறல் நடந்து உள்ளதாகவும் , அனுமதி கொடுப்பதில் விதிமீறல் நடக்கவில்லை எனவும் அரசு அனைத்து நடவடிக்கைளை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார் .


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies