BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Saturday, 26 July 2014

ஸ்மார்ட்போன் இருந்தால் இனி கொசு கடிக்காது

வாஷிங்டன்:ஸ்மார்ட்போனின் மூலமாக இப்போது கொசுவையும் விரட்ட முடியும்.  அதற்கான புதிய அப்ளிகேஷனை அமெரிக்க நிறுவனம் ஒன்று தயாரித்து அறிமுகம் செய்துள்ளது.இன்றைய உலகம் செல்போனுக்குள் சுருங்கிவிட்டது என்று கூறிவிடலாம். அந்த அளவுக்கு அனைத்து வசதிகளும் செல்போனில் கிடைக்கும்படி செய்யப்பட்டுள்ளன.

தற்போது இது இன்னும் ஒருபடி மேலே சென்று கொசுவை விரட்டக் கூட அப்ளிகேஷன் வந்துவிட்டது. தற்போது விற்பனையாகி வரும் பல்வேறு கொசு விரட்டிகளாலும் கொசுக் களை கட்டுப்படுத்த முடிவதில்லை என்று நம்மில் பலர் குறைபட்டு கொள்வதை கேட்கிறோம். தற்போது அதற்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. அமெரிக்க நிறுவனம் தயாரித்துள்ள இந்த புதிய ‘கொசு விரட்டி’ எனப்படும் புதிய அப்ளிகேஷனை ஸ்மார்ட்போனில் டவுன்லோடு செய்து அதனை இயக்கினால், அதில் இருந்து வெளியாகும் உயர் அதிர்வெண் கொண்ட சப்த அலைகள் கொசுக்களை ஓட ஓட விரட்டி விடும். கொசுக்களுக்கு பிடிக்காத இந்த அல்ட்ரா சவுண்டால் கொசுக்கள் நமக்கு அருகில் கூட வராது. அதே போல் எம் டிராக்கர் என்ற அப்ளிகேஷன் மூலமாக பல்வேறு பூச்சி தொல்லைகளில் இருந்தும் விடுபடலாம். இவை அனைத்தும் இணையதளத்தில் இலவசமாக கிடைக்கிறது என்பது கூடுதல் வசதி 


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies