BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Sunday, 13 July 2014

100 அடி பள்ளத்தில் வான் பாய்ந்ததில் 12 போ் வைத்தியசாலையில் அனுமதி (Photos)

எல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்ல வெல்லவாய பிரதான வீதியில் கதிர்காமத்திலிருந்து பண்டாரவளை நோக்கி சென்ற வான் ஒன்று எல்ல பிரதேசத்தில் 15ம் கட்டைப் பகுதியில் வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் 12 பேர் படுங்காயமடைந்து எல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று பகல் 1 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் படுங்காயமடைந்த 12 பேரில் 4 பேர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

வாகனசாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேரிட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்விபத்தில் ஜவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் இரு சிறுகுழந்தைகள் இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies