BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Wednesday, 16 July 2014

தமிழகத்துக்கு ரூ.1,233 கோடி ஒதுக்கீடு: ராயபுரத்தில் 3–வது ரெயில் முனையம்

ரெயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ரூ.1,233 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, ராயபுரத்தில் 3–வது ரெயில் முனையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாராளுமன்றத்தில் ரெயில்வே மந்திரி சதானந்த கவுடா கூறினார்.
மந்திரி பதில்

பாராளுமன்றத்தில் ரெயில்வே பட்ஜெட் மீது 15 மணி நேரம் விவாதம் நடைபெற்றது. அதற்கு ரெயில்வே மந்திரி சதானந்த கவுடா பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

இந்த விவாதத்தில் 76 உறுப்பினர்கள் பேசி உள்ளனர். 142 உறுப்பினர்கள் தங்கள் பேச்சை தாக்கல் செய்துள்ளனர். உறுப்பினர்கள் எண்ணற்ற கோரிக்கைகளை வைத்துள்ளனர். ஆனால், யாருமே ரெயில்வேயின் வருவாயை உயர்த்த தேவையான யோசனைகளை தெரிவிக்கவில்லை. இருப்பினும், அவற்றை நல்ல யோசனைகளாக கருதுவதுடன், விமர்சனங்களை ஆக்கப்பூர்வ விமர்சனங்களாக ஏற்றுக்கொள்கிறேன்.
கட்டண உயர்வு

பயணிகள் கட்டணம் மற்றும் சரக்கு கட்டண உயர்வு இந்த நேரத்தில் மிகவும் அவசியமானது ஆகும். கடந்த 10 ஆண்டுகளாக, கட்டணம் உயர்த்தப்படவில்லை. கட்டணத்தை உயர்த்தும்போது கூட சாமானியர்கள் மீது சுமை ஏற்றக்கூடாது என்று கவனமாக இருந்தேன். இப்போது கூட, பஸ் கட்டணத்தில் மூன்றில் ஒரு பங்குதான், தூங்கும் வசதி கொண்ட பெட்டியின் கட்டணமாக உள்ளது.

தற்போது நடந்து வரும் ரெயில்வே திட்டங்களை நிறைவேற்றி முடிக்க ரூ.5 லட்சம் கோடி தேவைப்படுகிறது. இவற்றில் பெரும்பாலானவை முந்தைய அரசின் திட்டங்கள் ஆகும். இருப்பினும், அவற்றை நிறைவேற்ற நரேந்திர மோடி அரசு போதிய நிதியை அளித்துள்ளது. மோடி அரசு எந்த விஷயத்தையும் அரசியல் ஆக்காது.

தற்போது நடந்து வரும் திட்டங்களை உரிய நேரத்தில் நிறைவேற்றி முடிப்பதில் கவனம் செலுத்துவோம்.
அன்னிய முதலீடு

முதலீட்டாளர்களிடம் தற்போதுவரை நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. சரக்கு ரெயில்பாதை, அதிவேக ரெயில் பாதை, புறநகர் ரெயில் பாதை போன்ற பெரிய ரெயில் திட்டங்களில் மட்டுமே அன்னிய முதலீடு அனுமதிக்கப்படும். ரெயில்களை இயக்குவதில் அன்னிய முதலீடு அனுமதிக்கப்படாது.

அதிவேக ரெயில்களின் இயக்கத்துக்கு ரூ.60 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது. சாமானியர்கள் மீது சுமை ஏற்றாமல், அதை நிறைவேற்றுவோம். 157 புதிய ரெயில்களை அறிமுகப்படுத்தி உள்ளோம். அரசு–தனியார் கூட்டு முறையில், ரெயில் திட்டங்களை மேம்படுத்த ரூ.15 ஆயிரம் கோடி முதலீட்டுக்கு நிறுவனங்கள் முன்வந்துள்ளன.
தமிழ்நாட்டுக்கு நிதி

ரெயில்வே பட்ஜெட்டில் எந்த மாநிலத்துக்கும் பாரபட்சம் காட்டப்படவில்லை. மேற்கு வங்காளத்தை நாங்கள் புறக்கணிக்கவில்லை. அம்மாநிலத்துக்குத்தான் அதிக அளவாக ரூ.3 ஆயிரத்து 280 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, உத்தரபிரதேசத்துக்கு ரூ.2 ஆயிரத்து 72 கோடியும், மராட்டிய மாநிலத்துக்கு ரூ.1,660 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகம் புறக்கணிக்கப்பட்டதாக கூறப்படுவதும் தவறு. தமிழகத்துக்கு ரூ.1,233 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை ராயபுரத்தை 3–வது ரெயில் முனையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கன்னியாகுமரியில் ரெயில் முனையம் அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கேரளாவைப் பொறுத்தவரை, நான் மிகவும் தாராளமானவன். கேரள எம்.பி.க்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்ய கூட்டு ஆய்வுக்குழு அமைக்கப்படும்.
நிறைவேறியது

ரெயில்வேயின் குறைவான நிதியைக் கொண்டு, உறுப்பினர்களின் பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்றி உள்ளேன். இன்னும் 7 மாதங்களில் அடுத்த பட்ஜெட்டை தாக்கல் செய்வேன். அப்போது, மற்ற கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு சதானந்த கவுடா கூறினார்.

பின்னர், ரெயில்வே பட்ஜெட் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies