BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Saturday, 19 July 2014

ஏர் இந்தியா விமானத்தின் 126 பயணிகள் தப்பினர்

மலேசிய விமானம் உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட அதே பாதையில் செல்ல இருந்த ஏர் இந்தியா விமானம் மாற்றுப் பாதையில் சென்றதால், அதில் பயணம் செய்த 126 பயணிகள் உயிர் தப்பினர். பெர்மிங்ஹாமில் இருந்து டெல்லிக்கு இயக்கப்படும் ஏர் இந்தியாவின் ஏஐ113 விமானம், உக்ரைனில் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட இதே பாதையில்தான் இயக்கப்பட்டது. பயண நேரத்தின்படி, மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட போது அங்கிருந்து 40 முதல் 80 கிமீ தொலைவில் இந்த விமானம் இருக்கும். சாதாரணமாக அந்த உயரத்தில் 5 நிமிடத்துக்குள் இத்தொலையை அடைந்து விடமுடியும். தற்போது, உக்ரைனில் உள்நாட்டு போர் நடைபெறுவதால், இந்த பாதையில் செல்ல வேண்டாம் என்று கடந்த வாரம்தான் ஏர் இந்தியா ந¤றுவனம் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, போர் பாதிப்பு இல்லாத பகுதியின் வழியாக ஏர் இந்தியா விமானங்கள் இயக்கப்படுகின்றன. ஏர் இந்தியா விமானம் கடைசி நேரத்தில் பாதையை மாற்றியதால், அதில் பயணம் செய்த 126 பயணிகள் உயிர் தப்பியுள்ளனர்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies