BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Wednesday, 30 July 2014

பீகார்: சாலையோரமாக தூங்கியவர்கள் மீது லாரி ஏறி 12 பக்தர்கள் பலி

இந்தியாவின் பீகார் மாநிலம், ஔரங்கபாத் மாவட்டத்தில் சாலையோரம் தூங்கிக்கொண்டு இருந்த சிவபக்தர்கள் மீது வேகமாக வந்த கனரக லாரி ஒன்று ஏறியதால், ஐந்து பெண்கள் உட்பட 12 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே மாண்டனர்.

பீகார் மாநிலம் ரோத்தாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த முன் னாள் சட்டமன்ற உறுப்பினரான பிரதீப் ஜோஷி, ஆண்டுதோறும் ‘ஷ்ரவண்’ மாதத்தில் பக்தர்களை ஆன்மீக சுற்றுலா அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இவருடைய மனைவி ரஷ்மி ஜோதி, இப்போது அந்தத் தொகுதியின் சுயேச்சை எம்எல்ஏ வாக இருக்கிறார். அந்த வகையில் இந்த ஆண்டும் ஜார்க்கண்ட் மாநிலம் தியோகர் என்ற இடத்தில் உள்ள சிவன் கோவிலுக்குத் தனி பேருந்தில் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆன்மீகச் சுற்றுலா நல்ல விதமாக முடிந்த நிலையில், நேற்று அதிகாலையில் ரங்க பாத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் முஃபசில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட புதுடெல்லி-கோல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் பேருந்தை நிறுத்திவிட்டு பக்தர்கள் சாலை ஓரமாக உறங்கிக்கொண்டு இருந்தனர்.

அப்போது, வேகமாக வந்த ‘கண்டெய்னர்’ லாரி ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகி ஓடி, தூங்கிக்கொண்டிருந்த பக்தர் கள் மீது ஏறி நசுக்கியது. இதில் 12 பேர் அதே இடத்தில் உடல் நசுங்கி பலியாயினர்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies