அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவிற்கு கடந்த ஆண்டு மே மாதம் ஒரு விஷம் தடவிய கடிதம் வந்தது. அதனை அனுப்பியவர் ஷனான் கெஸ் ரிச்சர்ட்சன் என்னும் 36 வயது மிக்க நடிகை ஆவார். இவர் டிவி தொடர்களில் நடித்து வருபவர். இந்த கடிதத்தில் ரிசின் என்னும் கொடிய வகை விஷம் இருந்தது. இதனால் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் அந்த விஷத்தை அவர் வைத்து இருந்தது உண்மை தான் , ஆனால் அதனை அவர் தடவவில்லை என்றும் அதனை தடவியவர் அவர் கணவர் என்றும் குற்றம்சாட்டினார்.
இவ்வாறு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தெரிவித்தார். அதன் பிறகு விசாரணை நடந்து வந்தது . விசாரணையில் அவர் கூறியது பொய் என்பது தெரிய வந்தது. விஷத்தையும் அவர் தான் தடவி உள்ளார். இவருக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனையும் 20 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது.

