BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Monday, 14 July 2014

23 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் நடிக்க வரும் அமலா. தொலைக்காட்சி தொடரில் நடிக்கிறார்

டி.ராஜேந்தரி, 'மைதிலி என்னை காதலி' என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை அமலா, 23 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழில் தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

மைதிலி என்னை காதலி, சத்யா, வெற்றி விழா, வேலைக்காரன், ஜீவா, அக்னி நட்சத்திரம் போன்ற பல படங்களில் நடித்து 80 மற்றும் 90களில் பிரபலமாக இருந்த நடிகை அமலா. பின்னர் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை திருமணம் செய்துகொண்டு ஆந்திராவில் செட்டிலாகிவிட்டார். திருமணத்திற்கு நடிக்க வந்த வாய்ப்புகளை மறுத்துவிட்டு குடும்ப பெண்ணாக வாழந்தார். மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் கொள்கையால் கவர்ந்த இவர் பிராணிகள் பாதுகாப்பில் தனது கவனத்தை செலுத்தினார். தற்போது பிராணிகள் பாதுகாப்பு அமைப்பில்  தன்னை ஈடுபடுத்திக் கொண்டு செயல்பட்டு வருகிறார்.

தறோது தமிழில் தயாராகும் புதிய தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடிக்க அமலா ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து அமலா செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘தொலைக்காட்சி தொடரின் கதை எனக்கு மிகவும் பிடித்து இருந்ததால் நடிக்க ஒப்புக் கொண்டேன். சென்னை எனக்கு மிகவும் பிடித்த நகரம். சினிமாவில் நடிப்பது பற்றி உடனடியாக முடிவு எதுவும் எடுக்கவில்லை. அதற்கு சில காலம். ஆகலாம்’’ என்றார்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies