புனே,
புனே நிலச்சரிவில் சிக்கி 25 பேர் பலியாகியுள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
புனே மாவட்டம் ஆம்பேகாவ் தாலுகா மாலின் கிராமத்தில் நடந்த நிலச்சரிவில் சிக்கி 25 உயிரிழந்தனர். இன்னும் ஏராளமானோர் மண்ணுக்குள் புதைந்து உள்ளனர். 165க்கும் மேற்பட்டோர் இடையூறுகளில் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. நிலச்சரிவில் பல வீடுகள் இருந்த அடையாளமே தெரியாமல் போய் விட்டது. வீடுகள் மீது பாறைகள், மரங்கள் விழுந்து கிடக்கின்றன. மேலும் கனமழை காரணமாக அங்கு சேறும் சகதியாக காட்சியளிக்கிறது. மீட்பு படையினர் கால் ஊன்றி பணியை மேற்கொள்ள முடியாத அளவுக்கு இடையூறுகள் உள்ளன. இந்த நிலையில் மீட்பு பணியில் ஆளில்லா விமானமும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது. சம்பவம் நடந்த பகுதிக்கு மேலே அந்த விமானம் வட்டமிட்டு நிலவரத்தை கண்காணித்து வருகின்றது.
இந்த
சம்பவம் கடந்த ஆண்டு உத்தரகாண்டில் நடந்த நிலச்சரிவை நினைவுபடுத்தும்
வகையில் உள்ளது. தேசிய பேரிடர் மீட்பு படையினர் 170 பேர் முதலில்
வரவழைக்கப்பட்டனர். பின்னர் அவர்களின் எண்ணிக்கை 400 ஆக உயர்ந்தது. சம்பவம்
நடந்த பகுதி அருகே அரசுக்கு சொந்தமான சர்க்கரை ஆலை உள்ளது. தகவல்
அறிந்ததும் அந்த ஆலை ஊழியர்களும் அங்கு விரைந்து வந்து மீட்பு பணியில்
ஈடுபட்டு வருகிறார்கள். ராட்சத பொக்லைன் எந்திரங்கள், டிப்பர் லாரிகள்
போன்றவை மீட்பு பணிக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வப்போது மழை
குறுக்கிடுவதால் மீட்பு பணியில் பெரும் பின்னடைவு ஏற்பட்டு இருக்கிறது.
நிலச்சரிவு சம்பவத்தை தொடர்ந்து கேத்–மஞ்சார் பகுதியில் அவசர கட்டுப்பாட்டு
அறை திறக்கப்பட்டு உள்ளது. மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் சம்பவ
இடத்தை பார்வையிட்டார்.