கடைசி மூன்று ஒரு நாள் போட்டிகளில் 2 சதங்களை அடித்ததன் மூலம் ஐசிசி ஒரு நாள் கிரிக்கெட் தர வரிசையில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறினார் தென்னாப்பிரிக்காவின் ஹாஷிம் ஆம்லா. ஐசிசி ஒரு நாள் கிரிக்கெட் வீரர்கள் தர வரிசைப்பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் தென்னாப்பிரிக்க கேப்டன் டிவில்லியர்ஸ் 885 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இந்தியாவின் விராட் கோஹ்லி, தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன் ஹாஷிம் ஆம்லா ஆகியோர் 868 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய வீரர் ஜார்ஜ் பெய்லி 856 புள்ளிகளுடன் நான்காம் இ டத்தில் உள்ளார்.இந்திய கேப்டன் டோனி, ஷிகர் தவான் ஆகியோர் 6 மற்றும் 10வது இடங்களில் நீடிக்கின்றனர். பந்து வீச்சாளர்களைப் பொருத்தவரை பாகிஸ்தான் சுழல்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் முதலிடத்தில் உள்ளார். மேற்கிந்திய தீவுகளின் சுனில் நரேய்ன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இந்திய பவுலர் ரவீந்திர ஜடேஜா ஐந்தாம் இடத்தில் உள்ளார்.
