.jpg)
சேலம் அருகே கோயிலில் 4 வயது சிறுவனை நரபலி கொடுக்க முயன்ற சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக சிறுவனின் தந்தை உள்பட 4 பேரை மக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். சேலம் மாவட்டம் தாரமங்கலம் அடுத்து உள்ள கோனகாபாடி கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தின் மத்தியில் பெரியாண்டிச்சி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் இருந்து நேற்று நள்ளிரவு ஒரு சிறுவனின் கதறல் சத்தம் கேட்டது. இதையடுத்து கிராம மக்கள், கோயிலுக்கு சென்று பார்த்தனர். கோயில் முன்புள்ள வேல் கம்பில் 4 வயது சிறுவனை ஒருவர் குத்த முயன்றதை கண்டு மக்கள் அதிர்ச்சியடைந்தனர். மக்களை கண்டதும், அந்த நபரும், உடன் வந்த பெண் உள்பட 3 பேரும் ஓட்டம் பிடித்தனர். மக்கள் சுதாரித்துக் கொண்டு விடாமல் துரத்தி சென்று அனைவரையும் மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்து தாரமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், சிறுவனின் தந்தையே அவனை நரபலி கொடுக்க வந்தது தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் கூறியதாவது: பெரியாண்டிச்சி அம்மன் கோயிலில் நள்ளிரவில் சிறுவனை வேலில் குத்த வந்தவர் பல்லடத்தை சேர்ந்த கண்ணப்பன் (40). அந்த சிறுவன், அவரது மகன் என்பது தெரியவந்துள்ளது. கண்ணப்பன், சாமியாடி குறி சொல்வதை தொழிலாக செய்து வருகிறார். அவருடன் வந்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம். இவர்கள், சிறுவனை நரபலி கொடுக்க வந்திருக்கலாம் என சந்தேகம் உள்ளது. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்.
URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com
பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
