பெண்களை செல்போனில் பேச வைத்து ஆண்களை உல்லாசத்துக்கு அழைத்து வழிப்பறி செய்த பெண்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாகன சோதனை
காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி, ஒட்டேரி உள்பட பல்வேறு இடங்களில் சாலையில் அடிக்கடி வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதையடுத்து வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு முகிலன் உத்தரவின்பேரில் கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் நாகலிங்கம் தலைமையில் சப்–இன்ஸ்பெக்டர்கள் டில்லிபாபு, கோவிந்தசாமி, தலைமை காவலர்கள் மோகன்ராஜ், பாஸ்கர், சுரேஷ் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு ஊரப்பாக்கம்–காரணைப்புதுச்சேரி கூட்டுரோடு சந்திப்பில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர்.
உல்லாசத்துக்கு அழைத்து வழிப்பறி
விசாரணையில் அவர், காரணைப்புதுச்சேரியைச் சேர்ந்த குட்டா என்ற ரத்தீஸ்(வயது 31) என்பதும் பழைய குற்றவாளி என்பதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் காரணைப்புதுச்சேரியைச் சேர்ந்த ஜான்(32), பாரத்(22) ஆகிய மேலும் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதான 3 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அதில் அவர்கள், பெண்களை செல்போனில் பேச வைத்து ஆண்களை உல்லாசத்துக்கு அழைத்து அவர்களிடம் வழிப்பறி செய்து வந்தது தெரியவந்தது. இவ்வாறு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊரப்பாக்கம் அருகே உள்ள அருங்கால் காட்டுப்பகுதியில் பணங்காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த ஜெயசந்திரன், வாசுதேவன் ஆகியோரை செல்போனில் பேசி வரவழைத்து அவர்களிடம் இருந்து ஒரு மோட்டார் சைக்கிள், ரூ.2 ஆயிரம் பணம், ஒரு செல்போன் ஆகியவற்றை வழிப்பறி செய்ததை ஒப்புக்கொண்டனர்.
தங்கம்–வெள்ளி பறிமுதல்
இதையடுத்து விபசாரத்தில் ஈடுபட்ட 3 பெண்களையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் கைதானவர்களிடம் இருந்து அரை கிலோ வெள்ளி பொருட்கள், 6 பவுன் தங்க நகை, 10 செல்போன்கள், 3 கத்தி ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினார்கள்.
பின்னர் கைதான 3 பெண்கள் உள்பட 6 பேரையும் போலீசார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவின்பேரில் சிறையில் அடைத்தனர். குற்றவாளிகளை விரைவாக பிடித்த தனிப்படை போலீசாரை வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு முகிலன் வெகுவாக பாராட்டினார்.