BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Monday, 21 July 2014

60 ஆவது பிறந்தநாளில் 42 வயது நடிகையை திருமணம் செய்யும் பிரான்ஸ் அதிபர் (Photos)


அடுத்தமாதம் பிரான்ஸ் அதிபர் பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே, தனது முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் செகொலேன் ராயலுடன் குடும்பம் நடத்தினார்.

இத்தம்பதிகளுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். ஆனால், திடீரென செகோலேனைப் பிரிந்த அதிபர், பத்திரிகையாளரான வேலரி ட்ரையெர்விய்லெர் (வயது 49) என்பவருடன் அதிபர் மாளிகையான ‘எலிசீ பேலஸ்’சில் சில ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தார்.

ஆனால், அவருடனும் பிராங்கோயிஸுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், அதிபர் மாளிகையை விட்டு வெளியேறிய வேலரி ட்ரையெர்விய்லெர், ஒரு வாரத்துக்கு பிறகு பிராங்கோயிஸ் ஹாலண்டே-வை பிரிந்து விட்டதாக அறிவித்தார்.

இந்நிலையில், பிரெஞ்சு சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்த பிரபல நடிகையான ஜூலி கெய்ட்டும், அதிபரும் காதலிப்பதாக தகவல் வெளியானது.

ஆரம்பத்தில், இத்தகவலை அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே தரப்பு மறுத்தது. ஆனால், கடந்த வாரம் செய்தியாளர்களின் கேள்விக்கு இது தொடர்பாக நேரடியாக பதிலளித்தார் பிராங்கோயிஸ் அப்போது, ‘ஏதும் முக்கியமான தகவல் இருந்தால், உங்களுக்கு நிச்சயம் தெரிவிப்பேன்’ என அவர் உறுதியளித்தார்.

இந்நிலையில், பிராங்கோயிஸ் வரும் ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி தனது 60-வது பிறந்த நாளை கொண்டாடவுள்ளார். அப்போது, 2 குழந்தைகளுக்கு தாயான 42 வயது நடிகை ஜூலி கெய்ட்டை திருமணம் செய்துக் கொள்ள அதிபர் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடப்பதாகவும் பிரெஞ்சு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies