BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Thursday, 31 July 2014

நீங்கள் சாப்பிடும் சிக்கன் நீங்கள் உட்கொள்ளும் மருந்து செயல்படாமல் தடுக்கும் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் !!

நான் வெஜ் பிரியரா நீங்கள் !!! அதுவும் சிக்கனை விரும்பி சாப்பிடுபவரா !! கண்டிப்பாக நீங்கள் படிக்க வேண்டிய பதிவு இது. சி.எஸ்.இ என்னும் விஞ்ஞானம் மற்றும் சுற்றுச்சூழல் நடத்திய ஆய்வில் சிக்கனில் அதிக அளவு ஆண்டி பயாடிக் இருப்பது தெரிய வந்துள்ளது .

மேலும் நாம் உண்ணும் இரண்டில் ஒரு கோழியில் அதிக அளவு ஆண்டி பயாடிக் இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது . டில்லி மற்றும் அதனை சுத்தி உள்ள இடங்களில் நடந்த இந்த ஆய்வின் முடிவில் மொத்தம் 70 கோழி மாதிரிகளில் , நாம் அடிக்கடி பயன்படுத்தும் 6 ஆண்டிபயாட்டிக் கலந்து இருப்பது தெரியவந்துள்ளது .

மேலும் 17 சதவீத மாதிரிகளில் ஒன்றிற்க்கும் மேற்பட்ட ஆண்டிபயாட்டிக் மாதிரிகள் கலந்து இருப்பதையும் கண்டறிந்தனர் .

ஏன் கோழியில் ஆண்டிபயாட்டிக் சேர்க்கின்றனர் ?? பதில் மிகவும் சுலபம் . ஆண்டிபயாட்டிக் சேர்ப்பதனால் கோழிகள் விரைவில் வளர்ந்து அதிக எடை அடைந்து விடுகிறது . இதனால் உரிமையாளர்கள் அதிக நாட்கள் காத்துக் கிடக்க வேண்டியதில்லை .

அவர்களுக்கு லாபமும் விரைவில் கிடைத்து விடுகிறது . இதனால் நமக்கு என்ன பிரச்சனை ??

கோழிகளிடம் அதிக அளவு ஆண்டிபயாட்டிக் கொடுக்கப்படுவதால் , கோழி மிகவும் சத்தான ஒன்றாக மாறிவிடுகிறது .

மேலும் அந்த கோழி ஆண்டிபயாட்டிக் மருந்துகளுக்கு எதிரான ஒன்றாக மாறி விடுகிறது . அதை நாம் உட்கொள்ளும் போது அதே போன்று நமது உடலும் ஆண்டிபயாட்டிக் மருந்துகளுக்கு எதிரான ஒன்றாக மாறி விடுகிறது .

 ஒரு சிறிய பாகத்தை மட்டும் தவிர்த்து விட்டு சாப்பிட்டால் பிரச்சனை இருக்காது என்று நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறு .

கோழியில் இருக்கும் சிறிய பாக்டரீயா நமது உடலுக்குள் புகுந்த உடன் அந்த பாக்டரீயா நமது உடலில் வளர்ந்து விடுகிறது .

இது கோழிகளுக்கு மட்டுமில்லை அனைத்து பண்ணை விலங்குகளுக்கும் இப்படி தான் நடக்கிறது . ஒரு ஆண்டிற்கு 240 கோடி கோழிகள் இந்தியர்களால் உட்கொள்ளப்படுகிறது . அப்படி என்றால் எவ்வளவு ஆண்டி பயாட்டிக் என்பதை நீங்களே கணக்கிட்டு பாருங்கள் .


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies