கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு முன்னணி வார இதழ் "அடுத்த சூப்பர் ஸ்டார்" யார் என்ற போட்டி ஒன்றை நடத்தி ஆன்லைன் வாக்கெடுப்பு நடத்தியது. இதில் விஜய் வெற்றி பெற்றதாகவும் அறிவித்து அவருக்கு "அடுத்த சூப்பர் ஸ்டார்" பட்டத்தை கொடுத்தது. இந்த போட்டியில் அஜீத் இரண்டாவது இடம் பெற்றார்.
இந்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை தான் ஏற்றுக்கொள்வதாகவும், கூறிய விஜய் இதற்காக பாராட்டு விழா நடத்த அனுமதி கேட்ட விஜய் ரசிகர்களுக்கு அவர் அனுமதியும் கொடுத்தார். ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் இந்த விழா பிரமாண்டமாக மதுரையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் சுதந்திர தின விழா வருவதால் அதற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவேண்டும் என்றும், இதுபோன்ற தனிமனித விளம்பர விழாக்களை தவிர்க்க வேண்டும் என்று விஜய் தரப்புக்கு அறிவுரை வழங்கியதோடு இந்த விழாவுக்கு அரசு அனுமதி அளிக்க மறுத்துள்ளது.
இந்த விழாவுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயாராகிவிட்ட நிலையிலும், இந்த விழாவுக்கு முக்கிய திரையுலக நட்சத்திரங்கள் வருவதற்கு ஒப்புக்கொண்ட நிலையில் திடீரென தமிழக அரசின் அறிவிப்பால் விஜய் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது. மேலும் விஜய் நடித்து வெளிவர இருக்கும் 'கத்தி' படத்தை தடை செய்ய வேண்டும் என்று மாணவர் அமைப்பு ஒன்று மனு கொடுத்த விஷயத்திலும் சக்திவாய்ந்த பின்னணி இருப்பதாகவும் கூறப்படுகிறது.