BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Tuesday, 22 July 2014

நயன்தாராவுடன் இரண்டு இரவுகள். நடிகரின் மறக்கமுடியாத அனுபவம் வீடியோ

சிம்புவுடன் நடிக்கும் 'இது நம்ம ஆளு' படத்தை தொடர்ந்து நயன்தாரா மேலும் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். கார்த்தியுடன் கொம்பன், மற்றும் ஆரியுடன் 'நைட் ஷோ' ஆகிய இரண்டு படங்களிலும் நயன்தாரா நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களிலும் காமெடி கேரக்டரில் கருணாஸ் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



பிரியாணி படத்திற்கு பிறகு வெங்கட்பிரபு இயக்கும் திரைப்படம் மாஸ். இந்த படத்தில் சூர்யா, நயன்தாரா மற்றும் எமிஜாக்சன் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தில் காமெடி கேரக்டரில் நடிக்க கருணாஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பொதுவாக காமெடியன்கள் ஹீரோவுக்கு துணையாகத்தான் வருவார்கள். ஆனால் மாஸ் படத்தில் நயன்தாராவின் நண்பராக நடித்து வருகிறாராம் கருணாஸ்.

மேலும் நயன்தாரா நடிக்கும் இன்னொரு படமான நைட்ஷோவிலும் காமெடி கேரக்டரில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் கருணாஸ். சமீபத்தில் நயன்தாராவுடன் காமெடி ரோலில் "மாஸ்" படத்தில் நடித்துவிட்டு அடுத்த நாளே "நைட்ஷோ" படத்தில் மீண்டும் நயன்தாராவுடன் நடித்த அனுபவத்தை கருணாஸ் பெற்றுள்ளாராம். இரண்டு படங்களின் படப்பிடிப்பும் இரவில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நயன்தாராவுடன் அடுத்தடுத்து நடிப்பதால் தான் இன்று எந்த படத்தில் நடிக்கிறோம் என்பதே புரியாமல் குழம்பியதாகவும் அவர்  கூறியுள்ளார்.

இந்த இரண்டு படங்களை தவிர குட்டிப்புலி படத்தை இயக்கிய முத்தையா அடுத்த இயக்கும் கொம்பன் படத்திலும் கருணாஸ் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்தி - லட்சுமி மேனன் ஜோடியாக நடிக்கும் இந்த படத்தில் கருணாஸுக்கு தனி காமெடி டிராக் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies