BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Saturday, 19 July 2014

கிளர்ச்சியாளர்கள் மிரட்டல்

மலேசிய போக்குவரத்து துறை அமைச்சர் லியோ டியோங் லை  உக்ரைனுக்கு புறப்பட்டுள்ளார். அவர்  மலேசியாவில் நேற்று அளித்த  பேட்டியில், ‘விமானம் நொறுங்கி கிடக்கும் பகுதியில் மலேசியா தீவிர  ஆய்வு மேற்கொள்ளும். கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள அந்த  இடம் பாதுகாப்பானதாக இல்லை. அங்கு தடயங்கள்  சேதப்படுத்தப்படுகின்றன. விமான சிதறல்கள், உடல்கள் இடம் மாற்றி  வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது’ என குற்றம் சாட்டி உள்ளார்.  ஐரோப்பிய குழுவின் செய்தி தொடர்பாளர் மைக்கேல் போசிர்கிவ்  கூறுகையில், ‘மீட்பு பணிக்கு சென்ற எங்களை கிளர்ச்சியாளர்கள்  சுதந்திரமாக செயல்படவில்லை. விரோத போக்குடன் நடந்து  கொள்கிறார்கள். துப்பாக்கி ஏந்திய அவர்கள் எந்த கேள்விக்கும்  முறையாக பதில் கூறவில்லை. துப்பாக்கியால் சுட்டும் மிரட்டினார்கள்’  என்றார்.

குற்றச்சாட்டுக்கு மறுப்பு

உக்ரைன் கூறிய குற்றச்சாட்டுகளை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள்  மறுத்துள்ளனர். டோனெட்ஸ்க் மக்கள் குடியரசின் பிரதமராக தன்னை  அறிவித்துக் கொண்டுள்ள கிளர்ச்சியாளர்கள் தலைவர் அலெக்சாண்டர்  போரோடெய் நேற்று அளித்த பேட்டியில், ‘விமானம் நொறுங்கிய  இடத்தில் இருந்து எந்த பொருளையும் நாங்கள் நகர்த்தவில்லை.  பயணிகளின் பொருட்களையும், நகை, கிரெடிட் கார்டையும் நாங்கள்  திருடியதாக உக்ரைன் அரசு புகார் கூறுவது பொய்யானது. அதே போல,  38 உடல்களை எரித்ததாகவும் கூறுவது பொய். எந்த உடலையும்  நாங்கள் எரிக்கவில்லை. ஒரு வீட்டின் கூரையை உடைத்து ஒரு உடல்  வீட்டுக்குள் விழுந்திருப்பதாகவும் அதை அகற்றுமாறும் வீட்டு  உரிமையாளர் எங்களிடம் கூறினார். ஆனால் அந்த உடலை கூட  நாங்கள் அகற்றவில்லை. அதை அகற்றக் கூடாது என வீட்டு  உரிமையாளிடமும் கூறியிருக்கிறோம்‘ என கூறினார்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies