மும்பை: மும்பையை சேர்ந்த 25 வயது மாடல் அழகி ஒருவர் மூத்த ஐ.பி.எஸ்.
அதிகாரியும் போலீஸ் டி.ஐ.ஜி.யுமான சுனில் பாரஸ்கர் மீது பலாத்கார புகார்
செய்துள்ளார். இதையடுத்து, பரஸ்கர் மீது எப்.ஐ.ஆர்.
பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் பிரபல மாடல் அழகியாக இருந்து நடிகையாக மாறிய பூனம் பாண்டேயிடம் விசாரணை நடத்தி அவருடைய வாக்குமூலத்தை பதிவு செய்ய குற்றப்பிரிவு போலீசார் தற்போது திட்டமிட்டுள்ளனர். பலாத்கார புகார் கொடுத்த மாடல் அழகி, மும்பை போலீஸ் கமிஷனர் ராகேஷ் மாரியாவை சந்தித்து சுனில் பாரஸ்கர் கடந்த 2012ம் ஆண்டு தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டியிருந்தார். அந்த நேரத்தில், மும்பை கூடுதல் போலீஸ் கமிஷனராக (வடக்கு மண்டலம்) சுனில் பாரஸ்கர் பணியாற்றினார்.
ஒரு வழக்கு சம்பந்தமாக சுனில் பாரஸ்கரை தாம் சந்திக்க சென்றதாகவும் அப்போதிருந்து அவர் தன்னிடம் நெருங்கி பழகியதாகவும் மாடல் அழகி தெரிவித்தார். ஆனால், பரஸ்கர் பின்னர் ஒரு ஓட்டலில் தன்னை பலாத்காரம் செய்ததாக மாடல் அழகி புகார் கூறியிருந்தார். ஆரம்பகட்ட விசாரணைக்கு பிறகு சுனில் பாரஸ்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே, தனக்கு எதிரான அனைத்து சம்பவங்களின் பின்னணியில் நடிகை பூனம் பாண்டே இருந்ததாகவும் தங்களுக்குள் தொழில் போட்டி இருந்ததாகவும் மாடல் அழகி தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பதால் பூனத்திடம் விசாரணை நடத்தி அவருடைய வாக்குமூலத்தை பதிவு செய்ய மும்பை குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.