BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Saturday, 26 July 2014

மலேசிய விமானம் தாக்குதல் எதிரொலி நெதர்லாந்தில் வசிக்கும் புடின் மகள் வெளியேற வேண்டும்

ஆம்ஸ்டர்டாம்:உக்ரைனில் மலேசிய விமானம் வீழ்த்தப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக நெதர்லாந்தில் வசித்து வரும் ரஷ்ய அதிபர் புடின் மகளுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவர் வெளியேற வேண்டும் என்ற அரசியல் தலைவர் பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது.உக்ரைனில் கடந்த 17ம் தேதி ரஷ்ய கிளர்ச்சியாளர்கள் வசம் இருக்கும் பகுதியின் மேலே பறந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளானது. இதில் 298 பயணிகளுடன் நடுவானில் விமானம் வெடித்து சிதறியது. இந்த தாக்குதலுக்கு கிளர்ச்சியாளர்கள்தான் காரணம் என உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் ரஷ்ய ஆதரவுடன்தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இதனால் ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்க ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஜி 7 நாடுகளை அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. இதற்கிடையில் ரஷ்ய அதிபர் புடினின் மூத்த மகளான மரியா புடினா (29) நெதர்லாந்தில் தனது பாய்பிரண்டான நெதர்லாந்து நாட்டை சேர்ந்த ஜோரிட் பாசனுடன் வசித்து வருகிறார். ஜோரிட் பாசன் ரஷ்யாவுக்கு சொந்தமான காஸ் பைப் கட்டுமான நிறுவனத்தில் உயர் பதவியில் வேலை செய்து வருகிறார்.

 மலேசிய விமான தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 100க்கும் மேற்பட்டவர்கள் நெதர்லாந்து நாட்டினர் என்பதால் அங்கு ரஷ்யாவுக்கும், புடினுக்கும் எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து சமூக வலைத்தளங்களில் புடின் எதிர்ப்பாளர்கள் மரியா புடினா வசிக்கும் பென்ட் ஹவுஸ் அபார்ட்மென்ட் பகுதிக்கு சென்று உங்களுடைய எதிர்ப்பை தெரிவியுங்கள் என்று பிரசாரம் செய்து வருகின்றனர். இதற்கிடையில் அந்த அபார்ட்மென்ட் அமைந்துள்ள ஹில்வர்சம் நகர மேயர் பீட்டர் புரோயர்ட்ஜெஸ் வானொலி பேச்சின்போது, மலேசிய விமானத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் துக்க தினம் அனுசரிக்கப்படுகிறது. இதற்கு காரணமான ரஷ்ய அதிபரின் மகளான மரியா புடினா நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

பின்ன அவரது பேச்சிற்கு எதிர்ப்பு கிளம்பவே தனது டுவிட்டர் தளத்தில், ÔÔநான் வானொலியில் உணர்ச்சி வசப்பட்டு பேசிவிட்டேன். மிகவும் துயரமான நேரத்தில் அவ்வாறு விரக்தியாக பேச நேர்ந்ததுÕÕ என்று வருத்தம் தெரிவித்திருந்தார். இருந்த போதிலும் மரியாவுக்கு எதிராக அங்கு போராட்டங்கள் நடக்க வாய்ப்புள்ளதால் அவரது வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies