துப்பாக்கி பட வெற்றிக்கு பிறகு விஜய் - முருகதாஸ் கூட்டணி மீண்டும் கத்தி படத்தில் இணைந்ததால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். தீபாவளிக்கு இப்படம் வெளிவர இருப்பதால் துரித வேகத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இதில் முக்கிய செய்தி என்னவென்றால், கத்தி படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்க தமிழ் சினிமாவின் முக்கிய புள்ளியை அணுகியுள்ளார் முருகதாஸ்.
பொலிவுட் பிரபலங்கள் வரை யோசித்த முருகதாஸ், திடீரென்று அஜீத்தை அணுகினால் என்ன என்று யோசனை வந்தவுடன் அதனை செயல்படுத்த முனைப்பு காட்டி வருகின்றார்.
இதனையடுத்து விஜய், அஜீத்தை இணைத்து படம் எடுக்க தயார் என்றும் முருகதாஸ் அறிவித்துள்ளார்.
விஜய் - அஜீத் இருவரும் ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் சேர்ந்து நடித்தார்கள். அதன் பிறகு தனித்தனியாக நடிக்க ஆரம்பித்தனர். தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக இருக்கின்றனர்.
இந்தி, மலையாளம், தெலுங்கு படங்களில் பெரிய ஹீரோக்கள் சேர்ந்து நடிக்கிறார்கள். ஆனால் தமிழ் படங்களில் அது போன்ற நிலைமை இல்லை.
இந்நிலையில் கத்தி படத்தில் விஜய் - அஜீத்தை மீண்டும் இணைய வைக்கும் முருகதாஸின் முயற்சி வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.