கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் சின்ன வயதிலேயே முறைப்படி சங்கீதம் கற்றவர். இசைக் கலைஞராக வரவேண்டும் என்று எண்ணியவர் அவரே எதிர்பாராத தருணத்தில் நடிகையாவிட்டார். நடிகையான பிறகு, எந்த சமயத்துலேயும் என்னோட அப்பா அம்மா பேரைக் கெடுக்க மாட்டேன் என்று உறுதி மொழி எடுத்துக்கொண்டிருப்பதாக அவ்வப்போது பத்திரிகை பேட்டிகளில் சொல்லி வந்தார் ஸ்ருதிஹாசன். ஆனால் சமீபகாலமாக அவர் நடிக்கும் படங்களை பார்க்கும்போது, ஆரம்பத்தில் அவர் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை காற்றில் பறக்கவிட்டுவிட்டார் என்று எண்ணத்தோன்றுகிறது.
அந்தளவுக்கு படு கவர்ச்சியாக, சில படங்களில் முகம் சுழிக்கம்படி நடிக்க ஆரம்பித்துவிட்டார் ஸ்ருதிஹாசன். படங்களில் மட்டுமின்றி, அண்மைக்காலமாக கலைநிகழ்ச்சிகள், பத்திரிகை மற்றும் டிவிக்களின் விருது வழங்கும் நிகழ்ச்சிகளிலும் கூட படு கவர்ச்சியாய் குலுக்கல் நடனம் ஆட ஆரம்பித்துவிட்டார் ஸ்ருதிஹாசன்.
கடந்த வாரம் ஒரு தொலைக்காட்சியின் விருது வழங்கும் விழாவும் மற்றும் பிரபல ஆங்கிலப்பத்திரிகையின் விருது விழாவும் சில நாட்கன் இடைவெளியில் அடுத்தடுத்து நடைபெற்றது. இவ்விரு விழாக்களிலும் ஸ்ருதிஹாசனின் கவர்ச்சி ஆட்டம் இடம்பெற்றிருந்தது. அதில் ஒரு விழாவுக்கு சிறப்பு விருந்தினர் யார் தெரியுமா? கமல்ஹாசன்தான்.
