இப்போது அனைவருக்கும் வந்து இருக்கும் காய்ச்சல் கால்பந்து காய்ச்சல் . எங்கு பார்த்தாலும் கால்பந்து தான். இதற்கு நமது ஆர்யாவும் அடக்கம் தான். அவ்வர் கால்பந்து போட்டிகளுக்கு தீவிர ரசிகர். நேரம் கிடைத்தால் பச்சையப்பா கல்லூரிக்கு சென்று கால்பந்து விளையாடுவார். இந்த உலக கோப்பை பற்றி அவரிடம் கேட்ட போது அவர் கூறியது, கால்பந்துக்கு முக்கியத்துவம் தராத அமெரிக்காவும் இம்முறை அதற்கு முக்கியத்துவம் தந்து உள்ளது.
அவரை கவர்ந்த அணிகள் பிரான்ஸ்,ஜெர்மனி,அர்ஜெண்டினா,கொலம்பியா. அவரை கவர்ந்த வீரர்கள் அர்ஜென்டினாவின் லியொனல் மெஸ்ஸி, கொலம்பியாவின் ஜேம்ஸ் ரோட்ரிகஸ் ஆகும். அவரது கணிப்பு படி இந்த முறை இறுதி போட்டிக்கு அர்ஜென்டினாவும், கொலம்பியாவும் வரும் என்கிறார்.

