புதிதாக பிரிக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தின் தூதுவராக அந்த மாநிலத்தின் சானியா மிர்சா அறிவிக்கப்பட்டார் . இந்த அறிவிப்பை அடுத்து பாஜக வின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான லட்சுமணன் , சானியா மிர்சா பாகிஸ்தானின் மருமகள் , அவர் எப்படி தூதுவராக நியமிக்கப்படலாம் என்று கேட்டு சர்ச்சை ஏற்படுத்தினார் . மேலும் , சானியா மஹாராஷ்டிராவில் பிறந்து, ஹைதராபாத்தில் வளர்ந்தார் . இப்போது பாகிஸ்தானியை திருமணம் செய்துள்ளார் . ஒரு வெளி ஆளுக்கு எப்படி மாநில தூதுவர் பதவி கொடுக்கலாம் என்று கேள்வி எழுப்பினார் .
இது குறித்து விளக்கம் அளித்த சானியா கூறுகையில் , நான் தூதுவராக நியமிக்கப்பட்டதை ஊடகங்கள் பிரச்சினையாக மாற்றி நேரத்தை வீணடிப்பது எனக்கு வேதனை அளிக்கிறது . நான் பாகிஸ்தானியை திருமணம் செய்து இருந்தாலும் , நான் இந்தியன் தான் . என் வாழ்க்கை முடியும் வரை நான் இந்தியனாக தான் இருப்பேன் என்றார் .
மேலும் தனது தாத்தா , பெரிய தாத்தா பெயர்களை கூறி அவர்கள் செய்த பணிகளை கூறினார் . தனது குடும்பம் கடந்த 100 ஆண்டுகளாக ஹதராபாத்திற்காக உழைத்து வந்ததாகவும் , தன்னை வெளி ஆள் என்று கூறுபவர்களுக்கு கண்டனங்களை தெரிவிப்பதாகவும் கூறினார் .
URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com
பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
