முன்னணி ஹீரோயினிகளுடன்
நடித்தால்தான் தனக்கு முன்னணி ஹீரோ அந்தஸ்து கிடைக்கும் என்று நினைக்கும்
சிவகார்த்திகேயன், மான்கராத்தே படத்தில் ஹன்சிகாவுடன் ஜோடி சேர்ந்தார்.
ஆரம்பத்தில் இதை யாருமே நம்பவில்லை. ஹன்சிகாவாவது சிவகார்த்திகேயனுடன்
நடிப்பதாவது என்று சொன்னார்கள். ஆனால், அப்போதைய நிலவரப்படி ஹன்சிகாவின்
மார்க்கெட் தள்ளாடிக்கொண்டிருந்ததால் அந்த படத்தில் நடிக்க வேண்டிய
கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார்.
ஆக,
மான்கராத்தேயில் ஹன்சிகாவுடன் டூயட் பாடினார் சிவகார்த்திகேயன். படமும்
வெற்றி பெற்றதால், இப்போது சிவகார்த்திகேயனுடன் நடிக்க முன்னணி நடிகைகளே
தயார்நிலையில் உள்ளனர். இந்த நிலையில், தற்போது டாணாவில் வருத்தப்படாத
வாலிபர் சங்கம் படத்தில் தன்னுடன் நடித்த ஸ்ரீதிவ்யாவுடன் நடித்து வரும்
அவர், அடுத்து ரஜினி முருகன் படத்தில் நடிக்கிறார்.
அப்படத்தில்
ரஜினி ரசிகராக நடிக்கும் சிவகார்த்திகேயன், பல கெட்டப்புகளில் ரஜினி
சாயலிலேயே தோன்றுகிறாராம்.அதோடு, மான்கராத்தேயில் ஹன்சிகாவுடன் நடித்தது
போன்று அப்படத்தில் இன்னொரு முன்னணி நடிகையுடன் நடிக்க விரும்புகிறாராம்
சிவகார்த்திகேயன். அது யார் என்றால்? சமந்தா என்கிறார்கள்.
தற்போது
விஜய்யுடன் கத்தி, சூர்யாவுடன் அஞ்சான் படங்களில் நடித்துள்ள சமந்தா,
விக்ரமுடன் பத்து எண்றதுக்குள்ள படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து
அவரை சிவகார்த்திகேயன் படத்துக்கு புக் பண்ண பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.
தற்போது சமந்தா சில தெலுங்கு படங்களில் பிசியாக இருப்பதால் இன்னும் முடிவு
சொல்லவில்லையாம். இருப்பினும் அவரது பதில் சிவகார்த்திகேயனுக்கு சாதகமாகவே
இருக்கும் என்கிறார்கள்.

