
முன்னணி நாயகர்களின் படங்கள் வருவது என்றாலே மற்ற நாயகர்கள் தங்கள் பட வெளியீட்டை தள்ளி வைத்து விடுகின்றனர்.முன்னணி நாயகர்களுடன் சேர்ந்து போட்டிபோடும் தைரியம் யாருக்கும் இல்லை. தனித்தனியாக களத்தில் இறங்கி வசூலை அள்ள வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள்.எப்போதாவது அதிசயமாகத்தான் இன்றைய ஹீரோக்களின் படங்கள் போட்டியில் குதிக்கின்றன. அந்த வகையில் இளைய தளபதி விஜய்யுடன், புரட்சி தளபதி விஷால் மோத இருக்கிறார்.விஜய்யின் கத்தி படம் 90 சதவீதம் முடிவடைந்துள்ளது, அதேபோல் விஷாலின் பூஜை படமும் பாடல்களை தவிர எல்லா வேலைகளும் முடிவடையும் தருவாயில் உள்ளதாம்.இதனால் இருவரும் வரும் தீபாவளி அன்று மோத உள்ளனர்.விஜய்யின் போக்கிரி படமும், விஷாலின் தாமிரபரணி படமும் ஏழு வருடங்களுக்கு முன் ஒரே நாளில் மோதியது குறிப்பிடத்தக்கது.
URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com
பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
