BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Wednesday, 23 July 2014

உங்கள் கால்களில் விழுகிறேன்! இரசிகர்களிடம் சூர்யா உருக்கம்

சத்யம் திரையரங்கில் அஞ்சான் படத்தின் சில பாடல்களும், டிரெய்லரும் நேற்று (22.07.14) திரையிட்டுக் காட்டப்பட்டன.
ஜூலை 23 இசை வெளியீடு என்ற பேனர் வைத்து 22-ம் திகதி இசைவெளியீட்டு விழா நடைபெற்றது. சூர்யா, லிங்குசாமி, யுவன், சுபாஷ் சந்திரபோஸ், நா.முத்துகுமார், விவேகா, மதன் கார்க்கி உட்பட பலரும் பேசியது அஞ்சானின் சிறப்புகளும், சூர்யாவின் திறமையையும் தான்.
லிங்குசாமி பேசியபோது ”கிட்டத்தட்ட மூன்று கதைகளை சூர்யாவிற்காக தயார் செய்து வைத்திருந்தேன். அதில் ஒன்று தான் அஞ்சான். சூர்யாவை புதிய முறையில் பல காலமாக பார்த்துவரும் இரசிகர்களுக்கு அறிமுகப்படுத்த இந்த முயற்சி எடுத்தேன். சரியாகவே செய்து முடித்திருக்கிறேன் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.
பாடல்களைக் கண்டு வாழ்த்துப்பேசிய தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார் “சூர்யாவை மற்றுமொரு வித்தியாசமான ஸ்டைலில் இந்த படத்தில் பார்க்கிறோம். கமல்ஹாசனுக்குப் பிறகு எந்த கெட்-அப் போட்டாலும் செட் ஆகக்கூடிய ஹீரோ சூர்யா தான். அடுத்த உலகநாயகன் என்று சொல்வதற்கு தகுதியான ஹீரோ சூர்யா” என்று புகழ்ந்தார்.
இரசிகர்களின் ஆரவார கரகோஷத்திற்கிடையே பேச ஆரம்பித்த சூர்யா “ அஞ்சான் என் திரைவாழ்க்கையின் முக்கிய படங்களில் ஒன்று. எல்லா படங்களுக்கும் உழைத்ததைப்போல் கடுமையாக இந்த படத்திற்கும் உழைத்தேன் என்றாலும், ஒரு பாடலைப் பாடி கொஞ்சம் கூடுதலாக என் உழைப்பை கொடுத்திருக்கிறேன்.
நான் பாடியதை நான் கேட்டு ஓகே சொல்வதற்கு முன்பே விளம்பரங்கள் கொடுத்துவிட்டார்கள். அனைவரும் இந்த படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறோம். அனைவரும் கண்டிப்பாக தியேட்டருக்குச் சென்று படம் பார்க்க வேண்டும்.
நான் நடித்த சிங்கம் திரைப்படம் 45 இலட்சம் திருட்டு விசிடிகள் போட்டு விற்கப்பட்டதாக அறிந்தேன். திருட்டு விசிடி தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. திருட்டு விசிடியை ஒழிக்க நீங்களும் உங்களுக்கு தெரிந்தவர்களிடம் அதை வாங்க வேண்டாம் என்று சொல்லுங்கள்.
உங்கள் கால்களில் விழுந்து வணங்கிக் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் உதவியின்றி திருட்டு விசிடியை ஒழிக்க முடியாது” என்று உருக்கத்துடன் பேசி முடித்தார்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies