BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Monday, 14 July 2014

என் கணவரை எடுத்துக்கோ ரிஹானா: பரபரப்பை ஏற்படுத்திய கோலியின் மனைவி

அர்ஜென்டினா வெற்றி பெற்றால் என் கணவரை ரிஹானாவிடம் ஒரு வாரம் அனுப்பி வைக்க தயாராக உள்ளதாக அர்ஜென்டினா கோல் கீப்பரின் மனைவி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
நேற்று நடந்த இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா, ஜேர்மனி அணிகள் மோதின. பல நாட்டு ரசிகர்களும் அர்ஜென்டினா வெற்றி பெற வேண்டும் என்று தனது ஆதரவை அர்ஜென்டினா அணிக்கு அளித்து வந்தனர்.

பிரேசில் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் நெய்மர் கூட மெஸ்ஸி கிண்ணம் வெல்ல வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்திருந்தார். ஆனால் பலம் வாய்ந்த ஜேர்மனி அணிக்கு முன்னால் ஏதும் எடுபடாமல் போய் விட்டது.

இந்தப் போட்டிக்கு முன்னதாக அர்ஜென்டினா அணியின் கோல் கீப்பர் ரொமிரோவின் மனைவி அர்ஜென்டினா வெற்றி பெற்று விட்டால் எனது கணவரை பொப் பாடகி ரிஹானாவிடம் ஒரு வாரம் அனுப்பி வைப்பேன் என்று பரபரப்பான ஆஃபர் ஒன்றை அறிவித்தார்.

இது பற்றி ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த கோலியின் மனைவி எலியானா கூறுகையில், அர்ஜென்டினா கிண்ணம் வென்றால் அதை விட மகிழ்ச்சி ஏதும் இல்லை.

எனது அணி மட்டும் கிண்ணத்தை வென்றால், நான் எனது கணவர் ரொமிரோவை ரிஹானாவுடன் ஒரு வாரம் தங்க அனுமதிப்பேன். அவர் சந்தோஷமாக ரிஹானாவுடன் ஒரு வாரத்தைக் கழிக்கலாம். நானே வழியனுப்பி வைப்பேன் என்று கூறியிருந்தார்.

முன்னதாக தனக்கு ரொமிரோவை ரொம்பப் பிடிக்கும் என்று பாடகி ரிஹானவே கூறியிருந்தார். இதை மனதில் வைத்துத்தான் இப்படி ஒரு பேட்டியை அளித்திருந்தார் எலியானா.

அரையிறுதியில் நெதர்லாந்துடன் அசத்திய ரொமிரோ நேற்று போட்டியில் கடைசி நேரத்தில் ஒரு கோலை தவறவிட்டு அர்ஜென்டினாவை தோற்கடித்து விட்டார். கடைசியில் அவருக்கு ஏதும் கிடைக்காமல் போய் விட்டது.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies