நாடோடிகள் படத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகமானவர் அனன்யா. இதை தொடர்ந்து இவர் பல மலையாள படங்களில் நடித்து வர, ஆஞ்சநேயா என்பவரை திருமணம் செய்யப் போவதாக அறிவித்து இருந்தார்.சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த படம் அதிதி. இப்படத்தின் தயாரிப்பாளருக்கும், இவருக்கு கடுமையான வாக்குவாதம் நடந்தது, ஏனென்றால் இவர் தன் வருங்கால கணவருடன் தான் ஹோட்டலில் தங்குவேன் என்று 50 லட்சம் பணத்தை வீணடித்ததாக கூறினார்.
தற்போது இதை மறுத்து பதில் அளித்த அனன்யா இனி இந்த தயாரிப்பாளர் படத்தில் எந்த நடிகர், நடிகையும் நடிக்க மாட்டார்கள், இந்த பிரச்சனையை அப்போதே சொல்லாமல், ஏன் படம் ரிலிஸ் ஆன 10 நாள் கழித்து சொல்ல வேண்டும்? இவரால் என் மானம், மரியாதை எல்லாம் போச்சு என்று கோபமாக தெரிவித்துள்ளார்.
