தயாரிப்பாளர்ஆர்.பி.செளத்ரியின் மூத்த மகன் ரமேஷ் நடித்து வெற்றி பெற்ற ஒரே படம் ஜித்தன். தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.
இந்த படத்தைராகுல் பரமஹம்சா என்ற அறிமுக இயக்குனர் இயக்குகிறார். இப்படத்தின் ஒளிப்பதிவு பொறுப்பை வின்சென்ட் செல்வா ஏற்றிருக்க, ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார்.
என்னதான் வெற்றி பெற்ற படத்தை இயக்கினாலும் படத்தின் வெற்றிக்கு பிரபலமான சில நடிகர், நடிகைகள் தேவை என தயாரிப்பாளரிடம் இயக்குனர் ராகுல் கோரிக்கை வைக்க, செளத்திரியும் தனது மூத்த மகனின் எதிர்காலத்திற்காக ஒப்புக்கொண்டாராம். ஜித்தன் ரமேஷுக்கு ஜோடியாக நடிக்க பிரபல நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் கோடிக்கணக்கில் பணத்தை கொட்டிக்கொடுத்தாலும் மார்க்கெட் இல்லாத ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகைகள் அலறியடித்து ஓடியதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.
இந்நிலையில் ஜித்தன் ரமேஷுடன் ஜோடி சேர இனியா சம்மதித்துள்ளார் என கூறப்படுகிறது. மேலும் வி .டி .வி. கணேஷ், தம்பி ராமயா, ஜே பி, மயில் சாமி, மற்றும் சோனா ஆகியோர்களும் நடிக்கின்றனர். ஸ்ருதி என்ற புதுமுகத்தையும் அறிமுகப்படுத்துகின்றனர்.
த்ரில் மற்றும் மர்மம் கலந்த கதையம்சம் கொண்ட இந்த படத்தின் போஸ்டர்களை வித்தியாசமாக அமைக்கும் பணியில் இயக்குனர் ஈடுபட்டுள்ளார். ஜித்தன் 2 படத்தின் போஸ்டர்களை பார்த்தவுடனே தியேட்டருக்கு சென்று படம் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ரசிகர்கள் மனதில் ஏற்படுத்த வேண்டும் என்பதே தமது எண்ணம் என்கிறார் இயக்குனர் ராகு.