பீகாரில் ஒரு ஆசிரியர் நமது குடியரசுத் தலைவர் யார் என்று கேட்டதற்கு பிரதீபா பாட்டில் என்று சொன்னாராம் . மேலும் பீகாரின் ஆளுநர் ஸ்மிருதி இராணி யாம் . ( ஸ்மிருதி இராணி இப்போதுள்ள அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருக்கிறார் )
பீகாரின் டும்ரி பகுதியில் ஒரு தொடக்க பள்ளியில் பணி செய்து வருபவர் , குமாரி அனிதா . இவர் தன்னுடைய பணி மாற்றத்திற்காக மாவட்ட நீதிபதியின் ஜன் தர்பாருக்கு சென்றார் . அந்த மாவட்ட நீதிபதியின் பெயர் குமார் அகர்வால் . அகர்வால் அந்த ஆசிரியரின் அறிவை சோதிக்க விரும்பினார் . எனவே மிக எளிதான கேள்விகளை கேட்டார் .
அந்த கேள்வியில் ஒன்றான இந்தியாவின் குடியரசுத் தலைவர் யார் என்ற கேள்விக்கு , பிரதீபா பாட்டில் என்று பதில் எழுதி நீதிபதியை வியப்பில் ஆழ்த்தினார் .
இப்போது அந்த ஆசிரியரின் கல்வி பட்டம் பெற்றது குறித்து சோதித்து வருகின்றனர் . இது குறித்து அகர்வால் கூறுகையில் , " இந்த சம்பவம் எனக்கு பயங்கர வியப்பை ஏற்படுத்தியுள்ளது . இது போன்ற சாதாரண கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாத ஆசிரியர் எப்படி பள்ளியில் நமது குழந்தைகளுக்கு பாடம் எடுக்க முடியும் ?? " என்றார்
கடந்த வாரம் பீகார் சட்டசபையில் , கல்வி அமைச்சர் , ஆசிரியர்கள் 1000 த்துக்கும் மேற்பட்டோர் தங்களது கல்விப் பட்டத்தை போலி சான்றிதழ் மூலம் ஏமாற்றி , பணிகளில் இணைந்துள்ளனர் என்று தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

