மலேசிய விமானம் சில நாட்களுக்கு முன்பு மாயமான சம்பவம் உலகையே உலுக்கிய ஒரு நிகழ்வாகும்.இந்த எம்.எச்-17 என்ற விமானம் பின்னர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த விமானத்தில் பயணித்த தமிழ் நடிகை ஒருவரும் மரணமடைந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.மலேசியாவைச் சேர்ந்த சுபாஷினி ஜெயரத்னம் என்ற சுபா ஜெயா என்ற இந்த நடிகை நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த இவரின் கணவர் மற்றும் மகளும் இந்த சம்பத்தின் போது பலியாகியுள்ளனர்.நாடகம், நடனம், சினிமா, தொலைக்காட்சி என்று பல்துறைகளில் சிறந்து விளங்கிய ஜெயா மலேசியாவில் பிறந்து வளர்ந்த இலங்கை வம்சாவளி தமிழ்ப் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

