BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Saturday, 19 July 2014

விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பின்னர் கிளர்ச்சியாளர்கள் பேசிய உரையாடல். உக்ரைன் வெளியிட்ட அதிரடி ஆதாரங்கள்.

கிழக்கு உக்ரைனில் மலேசிய விமானம் MH17 ஏவுகணையால் சுட்டு வீழ்த்தியது ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் என்பதற்கான உறுதியான ஆதாரங்களை உக்ரைன் அரசு வெளியிட்டுள்ளது. விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சில நிமிடங்களுக்கு பின்னர் ரஷ்யா ராணுவ அதிகாரியும் கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களும் பேசிக் கொண்ட ஆடியோ ஒலிப்பதிவு ஒன்றை இன்று உக்ரைன் அரசு அதிரடியாக வெளியிட்டுள்ளது.


மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட 20 நிமிடங்களுக்கு பின்னர் இருவரும் தொலைபேசியில் பேசியதை உக்ரைன் உளவுத்துறையினர் இடைமறித்து கேட்டுள்ளனர். அதில் கிளர்ச்சியாளர் ஒருவர், தாங்கள் இப்போது ஒரு விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும் அதில் 200 பேர்களுக்கு பேர் பயணம் செய்துள்ளனர் என்றும், இது நூறு சதவிகிதம் பயணிகள் விமானம் என்றும் இந்த விமானத்தில் தங்களுக்கு எவ்வித ஆயுதங்களும் கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

அடுத்ததாக கிளர்ச்சியாளர்கள் அவர்களுக்குள்ளாகவே ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளும் மற்றொரு ஆடியோ ஒலிப்பதிவையும் உக்ரைன் அரசு வெளியிட்டுள்ளது. அதில், போர் உக்கிரமாக நடக்கும் இடத்தில் மலேசிய பயணிகள் விமானம் எதற்கு வந்தது. இங்கே வருவதை அந்த விமானம் தவிர்த்திருக்க வேண்டும் என்றும் பேசியுள்ளனர்.

விமானத்தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என்று ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கூறும் கூற்று முற்றிலும் பொய் என்பது இந்த ஆடியோவில் உறுதிபடுத்தப்பட்டுள்ளதால் ரஷ்யாவுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்த தாக்குதலுக்கு முற்றிலும் ரஷ்யாதான் காரணம் என உறுதியிட்டு கூறியுள்ளார். இதனால் ரஷ்யாவுக்கு உலக அளவில் கடும் எதிர்ப்பு தோன்றியுள்ளது.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies