வங்கதேச அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சங்ககாரா முச்சதம் அடித்து சாதனை படைத்தார்.
இந்த ஆண்டு பெப்ரவரியில் இலங்கை அணி வங்கதேச சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. நாணய சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியவர்கள் விரைவில் வெளியேற 2வது விக்கெட்டுக்கு களமிறங்கியவர் சங்ககாரா. தொடக்க ஆட்டக்காரர்களான சில்வா, டைமூத் களத்தில் நிற்க தவறினாலும் கடைசி வரை அதிரடியில் அசத்த தவறவில்லை சங்ககாரா.
யாரும் எதிர்பாராத விதமாக முதல் இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சங்ககாரா மூன்று சதங்களை விளாசி 319 ஓட்டங்கள் எடுத்து தனது டெஸ்ட் போட்டியில் அதிகபட்ச ஓட்டத்தை பதிவு செய்தார்.
இதன் மூலம் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 587 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் 305 ஓட்டங்கள் குவித்த இலங்கை அணியில் சங்ககாராவின் 105 ஓட்டங்களும் அடங்கும்.
முதல் இன்னிங்ஸில் முச்சதம், இரண்டாவது இன்னிங்ஸில் சதம் என வங்கதேச வீரர்களை புரட்டிபோட்டார் சங்ககாரா.
இரண்டு இன்னிங்ஸிக்கும் சேர்த்து 400 ஓட்டங்களுக்கும் மேல் குவித்து சாதனை படைத்தார்.
சங்ககாரா அதிரடியில் கலக்கியும் அந்த போட்டி டிராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.