ஸ்லம்டாக் மில்லியன் படத்திற்காக இரண்டு ஆஸ்கார் விருதுகள் வாங்கி இந்தியாவிற்கு பெருமை சேர்த்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மற்றுமொரு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகம் ரஹ்மானுக்கு கெளரவ டாக்டர் பட்டம் கொடுத்து கெளரவிக்க இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கூறுகின்றன.
அமெரிக்காவில் உள்ள University of California, Berkeley என்ற பல்கலைக்கழகம், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கெளரவ டாக்டர் பட்டம் அளிக்க இருப்பதாக இன்று அறிவித்துள்ளது. கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என உலக அளவில் பிரபலமான ரஹ்மானுக்கு இந்த விருதை அளிப்பதில் பெருமையடைவதாக அந்த பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
ஹாலிவுட்டில் Million Dollar Arm என்ற படத்திற்கு இசையமைத்ததை தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது The Hundred-Foot Journey என்ற படத்திற்கு இசையமைத்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் 2014ஆம் வருடத்தில் ஹைவே, கோச்சடையான் ஆகிய படங்கள் வெளியானதை தொடர்ந்து, ஐ, காவியத்தலைவன், லிங்கா ஆகிய படங்களும் விரைவில் வெளியாக உள்ளன.