மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் சிவில் சர்வீசஸ்
திறனறித் தேர்வு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் தொடர் போராட்டம்
நடத்தி வரும் நிலையில், இப்பிரச்சினைக்கு ஒரு வாரத்திற்குள் தீர்வு
காணப்படும் என உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியிருந்தார்.
இப்பிரச்சினை இன்று மாநிலங்களவையில் எதிரொலித்தது. போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்றும், இதற்கு திட்டவட்டமான காலக்கெடுவை அரசு வழங்கவேண்டும் என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
இந்த பிரச்சினையை எழுப்பிய ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ், “ஒரு வாரத்திற்குள் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று பணியாளர் மற்றும் பயிற்சித்துறை மந்திரி கடந்த வெள்ளிக்கிழமை கூறினார். இப்போது உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மேலும் ஒரு வாரம் எடுத்துக் கொள்ளப்படும் என்கிறார். எப்போதுதான் அரசு இப்பிரச்சினைக்கு தீர்வு காணும்?” என்று கேள்வி எழுப்பினார்.
மந்திரி கொடுத்த 7 நாட்கள் அவகாசம் நாளையுடன் முடிகிறது என்று குறிப்பிட்ட சரத் யாதவ், “இந்தி மொழி மாணவர்களை தொடர்புபடுத்தி மட்டுமே இப்பிரச்சினை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தி மாணவர்களை விட அதிக எண்ணிக்கையில் உள்ள அனைத்து மாநில மொழி மாணவர்களையும் இந்த தேர்வு முறை பாதித்துள்ளது. ஆங்கில வழி மாணவர்களே அதிக அளவில் இதில் தேர்ச்சி பெறுகின்றனர்” என்றார்.
காங்கிரஸ், சமாஜ்வாடி, தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்களும் சரத் யாதவுக்கு ஆதரவாக பேசினர்.
பின்னர் இதுகுறித்து விளக்கம் அளித்த பாராளுமன்ற விவகாரத்துறை இணை மந்திரி பிரகாஷ் ஜவடேகர், “தேர்வு முறை தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண காலக்கெடு எதுவும் வழங்க முடியாது. விரைவில் தீர்வு காணப்படும் என உள்துறை மந்திரியும் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை மந்திரியும் கூறியிருக்கிறார்கள்.
பல்வேறு மாநில மொழிகள் தொடர்பான பிரச்சினை என்பதால் அந்த மாணவர்களின் உணர்வுகளை கவனத்தில் கொண்டு அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. எனவே, விரைவில் இதுபற்றி முடிவு எடுத்து அரசு அறிவிக்கும்” என்றார்.