BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Monday, 14 July 2014

நடிகைகளுக்கு திருமணம் ஒரு தடையல்ல…டாப்ஸி கருத்து…!

‘ஆடுகளம்’ படத்தில் நாயகியாக அறிமுகமான டாப்ஸிக்கு அதன் பின் வந்த தமிழ்ப் படங்கள் சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை என்றாலும் தெலுங்கில் இன்னமும் முன்னணி நடிகையாகத்தான் இருந்து வருகிறார். தற்போது தமிழில் ‘வை ராஜா வை, முனி -3′ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

அவ்வவ்போது ஏதாவது ஒரு கருத்தைச் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி வருவது இவருடைய வழக்கம். அப்படித்தான் சமீபத்தில் திருமணமான நடிகைகளை அதன் பின் நாயகியாக நடிக்க வைக்க மறுப்பது இந்தியத் திரையுலகின் சாபக்கேடு என்று கருத்து சொல்லியிருக்கிறார்.

“ஒரு நடிகைக்கு திருமணம் ஆனாலோ அல்லது அவர்கள் 30 அல்லது 40 வயதைக் கடந்தாலே இங்கு அப்படியே வாய்ப்பு தராமல் ஓரம் கட்டி விடுகிறார்கள். ஆனால், ஹாலிவுட்டில் 40, 50 வயதிலும் ரொமான்டிக் காட்சிகளில் அங்குள்ள நடிகைகள் நடிக்கிறார்கள். இது இந்தியத் திரையுலகின் மிகப் பெரிய சாபக்கேடு. திருமணமான பின் ஒரு நடிகையால் காதல் காட்சிகள் நடிக்க முடியாதா என்ன ?.

அதன் பின், முத்தக் காட்சியில் நடிப்பது என்பது அவரவர் தனிப்பட்ட விஷயம். அதற்காக அவர்களுக்க அக்கா வேடமோ, அல்லது அண்ணி வேடமோ கொடுப்பது முறையல்ல. நான் திருமணமான பின்னும் தொடர்ந்து நடிப்பேன், எனது கடைசி மூச்சு உள்ள வரை நடித்துக் கொண்டுதானிருப்பேன்.

முதலில், திருமணத்திற்குப் பின் நடிப்பதை விட்டுவிடலாம் என்றிருந்தேன். ஆனால், தற்போது எனது எண்ணத்தை மாற்றிவிட்டேன். திரையுலகத்தைச் சேர்ந்த யாரையும் நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். வீட்டிலாவது சினிமா வாசனை இல்லாமல் இருக்கலாம் என நினைக்கிறேன், ” என்கிறார் இந்த வெள்ளாவியில் வெளுத்த அழகி.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies