BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Thursday, 24 July 2014

கவிஞர் வைரமுத்துவிற்கு அறுவை சிகிச்சை!


சினிமா பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து முதுகுவலியால் அவதிப்பட்டார். இதைத்தொடர்ந்து அவரை கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அவருக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவரது முதுகு தண்டு வடத்தில் எலும்பு தேய்மானம் இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவருக்கு முதுகு தண்டு வடத்தில் நுட்பமான அறுவை சிகிச்சை (மைக்ரோ சர்ஜரி) செய்யப்பட்டது.
அறுவை சிகிச்சைக்கு பிறகு அவர் நலமுடன் உள்ளார் எனவும், இன்னும் சில நாட்களில் வீடு திரும்புவார் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அன்மையில்தான் வைரமுத்து தனது பிறந்த நாளை, கவிஞர்கள் திருநாள், கலை இலக்கியத் திருவிழாவாக கோவையில் கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies