BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Friday, 25 July 2014

கொசுக்களை விரட்ட இனி குட்நைட் , ஆல் அவுட் வேண்டாம் ! ஒரு மொபைல் அப்ளிகேஷன் போதும் !!



இப்போது கொசுக்கள் தொல்லை அதிகடித்து கொண்டே இருக்கிறது . மக்களும் கொசுக்களின் தொல்லையில் இருந்து வெளியேற ஸ்பிரே மற்றும் பல வழிகளை கையாண்டு வருகின்றனர் . ஆனால் இப்போதுள்ள மாடர்ன் உலகில் கொசுவை விரட்ட உங்களிடம் ஒரு மொபைல் போன் இருந்தால் போதும் . அந்த மொபைலில் ஒரு இலவச அப் இருந்தால் கொசுக்களை நீங்களும் விரட்டலாம் .


அந்த அப்ளிகேஷன் பெயர் , " அண்டி மஸ்கிட்டோ சோனிக் ரிப்பெல்லர் "

இந்த அப்ளிகேஷன் கொசுக்களை விரட்டியடிக்கும் மீயொலி அதிர்வெண்களில் அலை எழுப்புவதால் , இந்த சத்தங்களை கேட்கும் கொசுக்களை தூரமாக சென்று விடும்  . மேலும் இந்த ஒலி கொசுக்களின் எதிரிகளான ட்ராகன் பிளை மற்றும் வவ்வால் போன்றவற்றின் ஒலிகளை ஒத்து இருக்கும் . ஒரு முறை ஒரு ஆண் கொசுவிடம் துணை வைத்துக் கொண்ட பெண் கொசு அடுத்த முறை ஆண் கொசுக்களிடம் இருந்து விலகியே இருக்கும் . எனவே ஆண் கொசு போன்று ஒலி எழுப்புவதால் பெண் கொசுக்கள் நம் பக்கம் வராது .



இந்த அப்ளிகேஷன் மீயோலி அதிர்வெண்களில் சத்தம் எழுப்புவதால் மனிதர்களுக்கு இந்த சத்தம் தொல்லை கொடுக்காது என்று கூறி இருந்தனர் , ஆனால் இதை உபயோகப்படுத்திய சிலர் இதில் இருந்த சத்தம் தொல்லையாக இருப்பதாக தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர் .

இந்த அப்ளிகேஷன் 100 சதவீதம் கொசுக்களை விரட்டும் என்று சொல்ல முடியாது . உலகில் 3,500 வகையான கொசுக்கள் உள்ளன . அவை அனைத்தையும் இந்த அப் விரட்டும் என நாம் எதிர்பார்க்கக் கூடாது .  


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies