தயாரிப்பாளர்களின் நலன் கருதி டைரக்டர் சேரன் ஆரம்பித்திருக்கும் C2H நிறுவனத்தின் தொடக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
விழாவில் பேசிய டைரக்டர் அமீர் இப்போதான் பெப்சி அமைப்போட மீட்டிங்கை முடிச்சிட்டு வர்றேன்.
பெப்ஸி (FEFSI) எனப்படும் தென்னிந்தியை திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (Film Employees Federation of South India)’ இன்னும் 6 மாசத்துல ‘Film Employees Federation of Tamilnadu-FEFTA’ ( ‘பெப்டா ) மாறிடும். இந்த விழாவுக்கு வரலாமா வேண்டாமா? அப்படி வந்தா எனக்கு ரெட் கார்டு போட்டுடுவாங்களான்னு சில பேர் போன் பண்ணி கேட்டாங்க…. என்றார்.
அதற்கு நன்றி தெரிவித்துப் பேசிய பாரதிராஜா எல்லாரும் ஒற்றுமையா இருந்தா எல்லாவற்றையும் உரிமையோட கேட்டு வாங்கலாம். ஆனா நம்மகிட்ட ஒற்றுமை இல்ல. இதுல வேற சில பேர் இந்த விழாவுக்கு வரலாமா? வேண்டாமா?ன்னு போன் பண்ணி கேட்டாங்களாம்.
தமிழனான நீங்கெல்லாம் என்னைக்கிடா முதுகெலும்போட நிக்கப் போறீங்க…
இருக்கிற சொத்தையெல்லாம் எடுத்துட்டா சென்னைக்கு வந்துட்ட. வெறும் 300 ரூபாயோட வந்திருப்பே…என்னத்தை இழக்கப்போற..?
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் அமைப்புன்னு பேர் இருக்கிற வரை நான் உங்களை அங்கீகரிக்கப் போறதில்ல, உங்களை வேலைக்கு எடுக்கவும் போறதில்லேன்னு சொன்னேன்.
என்னைக்கு தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் அமைப்புன்னு சொல்லுகிறாயோ அன்னைக்குத்தான் அங்கீகரிப்பேன்னு அமீர்கிட்ட சொன்னேன். அது இவ்வளவு காலத்துக்கு அப்புறம் வந்துருக்கு. இன்னைக்கு மாத்துறதுக்கு உத்திரவாதம் கொடுத்துட்டான். அவனுக்கு நன்றி.
இப்படித்தான் ‘தென்னிந்திய நடிகர் சங்கம்’ பெயரை ‘தமிழ்நாடு திரைப்பட நடிகர் சங்கம்’னு மாத்தச் சொல்லி பல வருஷமாக போராடிக்கிட்டிருக்கேன். எத்தனை போராட்டம் தான் பண்ணுறது? எத்தனை மேடைகள்ல தான் கத்துறது? எவனும் உப்பு போட்டு சோறு திங்கிறது இல்ல…
ஆனா சீக்கிரத்திலேயே ‘நடிகர் சங்கம்’ உள்ளிட்ட அமைப்புகள் எல்லாம் தமிழ்நாடுங்கிற பேருக்கு கீழ வரணும். அதுக்கு நாம ஒற்றுமையா இருக்கணும் என்றார் காட்டமாக…