மனநிலை குன்றிய மாற்றுத் திறனாளிப் பெண் ஒருவர் சனிக்கிழமை இரவு RER C யினுள் வைத்துப் பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் எனக் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.Guyancourt (Yvelines) வசிக்கும் இந்தப் பெண் காவற்துறையினரிடம் முறைப்பாடு வழங்கி உள்ளார்.
காவற்துறையினரின் முதற்கட்டத் தகவலின் படி இந்தப் பெண் பரிசிற்கும் Saint-Quentin-en-Yvelines இற்கும் இடையில் RER C யில் இரவு 19h00 அளவில் பயணித்துள்ளார். அப்போது இவர் அருகில் வந்தமர் ந்த ஒரு ஆண் தனது காற்சட்டையைக் கழற்றியபடி தனது உறுப்பைக் காட்டியபடி இருந்து விட்டு அந்தப் பெண்ணை மிரட்டி வல்லுறவிற்கு ஈடுபடுத்தி உள்ளான். வல்லுறவு கொண்டு விட்டு அதன் பின்னர் அவன் அந்தத் தொடருந்தை விட்டு இறங்கிக் சென்று விட்டான். மிகவும் அதிர்ச்சியடைந்த நிலையில் இருந்த இந்தப் பெண்ணை அந்தத் தொடருந்தின் இறுதித் தரிப்பிடத்தில் காவற்துறையினர் மீட்டுள்ளனர்.
அந்தப் பெண்ணிண் ஆடையிலிருந்த வன்புணர்வாளனின் மரபணுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த விசாரணைகள் தொடருந்துக் காவற்துறையினரிடம் வழங்கப்பட்டுள்ளது.