BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Saturday, 12 July 2014

ஆர்யா தம்பி நடிக்கும் புதிய படம் – சென்னை சிங்கப்பூர்

சின்னத்திரை நடிகர் விஜய் ஆதிராஜ் இயக்கிய புத்தகம் உட்பட ஒரு சில படங்களில் நடித்தும் டேக் ஆஃப் ஆகாமலே இருந்தார் ஆர்யாவின் சத்யா. எப்படியாவது தம்பியை தூக்கி நிறுத்தியே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் அமரகாவியம் படத்தை தானே தயாரித்து தன்னுடைய தம்பியை ஹீரோவாக நடிக்க வைத்தார் ஆர்யா. அமரகாவியம் தொடங்கப்பட்டு பல மாதங்கள் கடந்தநிலையிலும் அந்தப் படம் பற்றி வெளியே தெரியாமலே இருந்தது. கடந்த மாதம் இசைவெளியீட்டுவிழா நடத்தப்பட்ட பிறகு நிலைமை மாறிவிட்டது.

அமரகாவியம் படம் குறித்து திரையுலகில் பேச்சு வந்தது மட்டுமல்ல, சத்யா மீதும் பல இயக்குநர்களின் பார்வையும் திரும்ப ஆரம்பித்துள்ளது. இதற்கிடையில் அமரகாவியம் படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது. இந்தப் படத்தை தொடர்ந்து சென்னை சிங்கப்பூர் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் சத்யா. இந்தப் படத்தை பிரபல பட நிறுவனம் ஒன்றும் சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றும் இணைந்து தயாரிக்க இருக்கிறது. தலைப்புக்கு ஏற்ப படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூரில் படமாக்கப்பட உள்ளன.

சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்ற இளைஞன், சிங்கப்பூரைச் சேர்ந்த பெண்ணை காதலிக்கிறார். அதனால் ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றிய கதையாம் இது. சத்யா நடித்துள்ள அமரகாவியம் படத்திற்கு இசை அமைத்த ஜிப்ரான்தான் இந்த படத்திற்கும் இசை அமைக்க இருக்கிறார். விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ள இப்படத்தின் கதாநாயகி மற்ற கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies