நடிகர் விஜய்க்கு ‘அடுத்த சூப்பர் ஸ்டார்’ பட்டத்தை விழா எடுத்து வழங்க குமுதம் வார இதழ் வேலைகளை முடுக்கி விட்டுள்ளது.
வரும் ஆகஸ்ட் 15- ம் தேதி மதுரையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற உள்ள இந்த விழாவில் தனது ரசிகர்கள் முன்னிலையில் விஜய் இந்தப்பட்டத்தை வாங்கிக் கொள்கிறார்.
மேலும் விழாவில் கலந்து கொண்டு விஜய்யை வாழ்த்திப் பேச தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உள்ள முன்னணி நட்சத்திரங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே விஜய் நடித்து வரும் ‘கத்தி’ படம் வரும் தீபாவளி ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இப்படத்தின் டைட்டில் கார்டில் விஜய்யின் பெயருக்கு முன்னால் அவருக்கு கொடுக்கப்படும் ‘சூப்பர் ஸ்டார்’ பட்டத்தை போட்டு விடலாமா..? என்று யோசித்து வருகிறாராம் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ்.
படம் தீபாவளிக்குத்தான் ரிலீஸ். அதற்குள் விஜய்க்கு அதிகாரப்பூர்வமாக சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுக்கப்பட்டு விடும் என்பதால் தனது கத்தி பட டைட்டிலிலேயே விஜய் பெயருக்கு முன்னால் அந்தப் பட்டத்தை போட்டு விஜய்யை குஷிபடுத்த திட்டமிட்டிருக்கிறாராம்.
அதோடு விஜய் ரசிகர்களையும் அது உற்சாகப்படுத்தும், அதுவே படம் கலெக்ஷனை அள்ள ஒரு காரணமாகவும் இருக்கும் என்பதால் தான் ஏ.ஆர்.முருகதாஸுக்கு இப்படி ஒரு யோசனை.
அனேகமாக கத்தி பட டைட்டிலில் ‘இளையதளபதி’ போய் ‘சூப்பர் ஸ்டார்’ விஜய் என்கிற பெயர் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
வரும் ஆகஸ்ட் 15- ம் தேதி மதுரையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற உள்ள இந்த விழாவில் தனது ரசிகர்கள் முன்னிலையில் விஜய் இந்தப்பட்டத்தை வாங்கிக் கொள்கிறார்.மேலும் விழாவில் கலந்து கொண்டு விஜய்யை வாழ்த்திப் பேச தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உள்ள முன்னணி நட்சத்திரங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.