BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Thursday, 31 July 2014

‘சூப்பர் ஸ்டார்’ பட்டத்தை வாங்க விட மாட்டீங்களாய்யா…! : உச்சகட்ட விரக்தியில் விஜய்

ஒரு பக்கம் ‘கத்தி’ படத்தின் கூர்மையை மழுங்கடிக்கும் வேலைகளில் ஈழத்தமிழர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

இன்னொரு பக்கமோ விஜய்க்கு கொடுக்கப்பட இருக்கும் ‘அடுத்த சூப்பர் ஸ்டார்’ பட்டத்தை கெடுப்பதற்கான எல்லா வேலைகளும் கன கச்சிதமாக நடந்து வருகிறது.

அதற்காக இந்த விழாவுக்கு அதோ இதோ என்று டபாய்க்கிற ஹீரோக்களுக்கு தானே நேரடியாக போனைப் போட்டு அழைப்பு விடுத்து வந்தார்.

விஜய்யே கூப்பிட்ட பிறகு எப்படி போகாமல் இருப்பது என்று பல இளம் ஹீரோக்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

எப்படியாவது ‘குமுதம்’ தர இருக்கும் இந்த பட்டத்தை மதுரை மண்ணில் வாங்கி விட வேண்டுமென்கிற ஃபுல் மூடுக்கு வந்து விட்டார் விஜய்.

இதற்கிடையே ஆகஸ்ட் 15-ம் தேதி ‘சுதந்திர தினம்’ என்பதால் இப்படிப்பட்ட தனி மனிதனின் துதிபாடும் விழாக்களை அன்றைய தினத்தில் நடத்தக்கூடாது என்று அரசின் சார்பில்  மறைமுகமாக எச்சரிக்கை செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

இந்த எச்சரிக்கை வந்ததிலிருந்தே மூட்-அவுட்டாகி இருக்கிறார் விஜய்.

போதாக்குறைக்கு மதுரை விழாவை நடத்த போலீஸ் தரப்பிலும் நெருக்கடி, பாதுகாப்பு கெடுபிடி, விழா நடக்கும் அன்றைய தினத்தின் ரஜினி ரசிகர்கள் போராட்டம் நடத்த இருக்கிறார்கள் என அடுத்தடுத்து அவரது காதைக் குடையும் செய்திகளால் உச்சகட்ட விரக்தியில் இருக்கிறாராம் விஜய்.

சூப்பர் ஸ்டாருக்கான எல்லாத் தகுதியும் எங்க தலிவருக்கு இருக்கு, அப்போ ஏய்யா இந்தமாதிரி பண்றீங்க என்கிற கொதிப்பில் இருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.

விழா ஆரம்பித்து முடிவதற்குள் இன்னும் என்னென்ன சர்ச்சைகள் ‘சூப்பர் ஸ்டார்’ பட்டத்தை பதம் பார்க்கப் போகிறதோ தெரியவில்லை.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies