தமிழ் சினிமாவில் தனது சிறு வயது முதல் நடித்து வரும் நடிகர்கள் யார் என்றால் அது கமலும் சிம்புவும் தான். சிம்பு தனது சிறு வயதில் இருந்தே தனது தந்தை டி.ராஜேந்தரின் படங்களில் நடித்து வந்தார். அதன் பின்பு தானும் ஒரு நடிகனாக உயர்ந்தார். தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கி கொண்டார். அவருக்கு என லிட்டில் சூப்பர் ஸ்டார் பட்டமும் தரப்பட்டது.
அதன் பிறகு தான் இனி லிட்டில் இல்லை என்பதால் தனது பட்டத்தை "யங் சூப்பர் ஸ்டார் " என மாற்றி கொண்டார். ஆனால் அதற்கு பிறகு சிம்புவிற்கு வந்த எந்த படங்களும் வெற்றி பெறவில்லை. அந்த பட்டம் தனக்கு ராசியில்லை என்பதால் அந்த பட்டத்தை துறக்க தயாராகி விட்டார். இனி தன்னை யாரும் "யங் சூப்பர் ஸ்டார்" என்று அழைக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.

