BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Saturday, 12 July 2014

தம்பதியினரின் ஆசை நிறைவேறுமா?

செவ்வாய்க்கு செல்லும் முதல் ஜோடி என்ற பெருமையைப் பெற அமெரிக்கத் தம்பதியினர் காத்திருக்கின்றனர்.

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் டாபர் மெக்கல்லம்-ஜேன் பாயிண்டர் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர்.

பாரகன் விண்வெளி வளர்ச்சிக்கழகம் என்ற தனியார் விண்வெளி நிறுவனத்தை நடத்திவரும் இத்தம்பதியினர், வரும் 2021ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்திற்கு செல்வதற்காக முன்னேற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

'இன்ஸ்பிரேஷன் செவ்வாய்' என்று அழைக்கப்படும் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான உயிர் காக்கும் அமைப்புகளுக்கான அனைத்து ஆய்வுகளையும் பாரகனின் ஆராய்ச்சிக் குழு வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

இந்நிலையில் செவ்வாய்க் கிரகத்திற்கு செல்லும் குழு உயிர் வாழ்வதற்குத் தேவையான சிறுநீர் மறுசுழற்சி, ஆக்சிஜன் தயாரிப்பு மற்றும் கார்பன் டைஆக்சைடு நீக்கம் போன்றவை இந்தக் குழுவினரால் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தற்போது அமெரிக்க அரசின் நிதி உதவிக்கும், நாசா விண்வெளிக் கழகத்தின் ஏவுகணைத் தளம் மற்றும் ஓரியன் குழுவின் போக்குவரத்து வாகன உபயோக அனுமதிக்கும் காத்திருக்கின்றனர்.

திட்டமிட்டபடி அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்றால் செவ்வாய்க் கிரகத்திற்கு செல்லும் முதல் ஜோடி என்ற பெருமையை இந்தத் தம்பதியர் பெறமுடியும்.

மேலும் கடந்த 1990களில் பூமியின் மீது கடுமையான விண்வெளி நிலைகளை ஆராய மேற்கொள்ளப்பட்ட பயோஸ்பியர் 2 என்ற சோதனையில் இவர்கள் பங்கு கொண்டிருந்தது குறிப்படத்தக்கது.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies