இந்தியாவில் மக்கள் தொகை நாளுக்கு நாள் பெறுகிக்கொண்டே போகிறது இதனால் பலருக்கு வேலை இல்லா நிலைமை, அதிலும் குறிப்பாக பல லட்சங்கள் செலவு செய்து பொறியியல் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருப்பவர்களின் நிலைமை வீட்டில் எப்படி இருக்கிறது, அவரது வாழ்க்கையில் ஏற்படும் அசிங்கத்திலிருந்து மீண்டு எப்படி வாழ்க்கையில் முன்னேறுகிறான் என்பதை பற்றி கூறுவது தான் வேலை இல்லா பட்டதாரி.
பொறியியல் முடித்துவிட்டு தான் படித்த கட்டிட கட்டுமான துறையில் நியாயமான முறையில் நேர்மையான மனிதர்களுக்கு மத்தியில் வேலை பார்க்க ஆசைப்படும் நாயகன் இடைவேளை வரைக்கும் அப்படி ஒரு வேலை கிடைக்காமல் கஷ்டபடுகிறார். இடைவேளைக்குப் பின் அப்படி ஒரு வேலை கிடைத்தாலும், அப்படியாகக் கிடைத்த வேலையை தக்க வைத்துகொள்ள கஷ்டப்படுகிறார்.
காரணம் நம் நாயகன்தான் நேர்மையானவன் ஆயிற்றே. அதனால் அவனைத் தொந்தரவு செய்ய ஒரு அமுல்பேபி வில்லனாக வருகிறான். அவ்வப்போது டூயட்பாட பக்கத்துவீட்டில் குடியேறும் அமலாபேபி ஹீரோயினாகிறார். அவ்வளவு தான் கதை.
முதல்பாதியில் விறுவிறுப்பான காட்சிகள் எதுவும் இல்லை என்றாலும் திரைக்கதை எழுதிய விதத்தில் அவை விறுவிறுப்பாகவே நகர்கின்றன. என்னை கேட்டால் படத்தின் பெரும்பலம் தனுஷைத் தவிர்த்து வசனமும் ஒளிபதிவுமே என்பேன். பெரும்பாலான வசனங்கள் பட்டையக் கிளப்புகின்றன.
அதிலும் தனுசின் டயலாக் டெலிவரி பிரமாதம். 'முன்னல்லாம் இல்லதாவங்க இருக்குறவங்கட்ட இருந்து பிடுங்கினாங்க, இப்ப என்னடான்னா இருக்குறவங்க இல்லாதவங்க கிட்ட இருந்து பிடுங்குறீங்க' ஒரு சோற்றுப்பதம். தனுஷ் பேசும் பெரும்பாலான வசனங்கள் அடிபொலி. செயற்கைத்தனம் இம்மியளவும் இல்லை.
என்ன நாயகி அமலாபால் இடத்தில் வேறொரு ஈரோயின் இருந்திருந்தால் இன்னும் சூப்பராய் இருந்திருக்கும். அமலாபாலுக்கு கல்யாணம் ஆகிவிட்டதாலோ என்னவோ ஆண்டியாகவே தெரிகிறார். சொல்லபோனால் அதுதான் உண்மையும் கூட.
சமீபத்திய வெற்றிப்படங்களின் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் தான் இப்படத்தின் இயக்குநர் என்பதால் படத்தின் ஒளிபதிவு ரிச்சாக இருக்கிறது. நன்றாகவும் இருக்கிறது. சென்னைக்குள்ளேயே படம் மொத்தத்தையும் முடித்தது பாராட்டத்தக்கது.
படத்தின் சில காட்சி அமைப்புகள் கொஞ்சம் பிரஷ்ஷாக இருந்தது. அதில் ஒன்று நாயகன் ரகுவரன் நாயகி ஷாலினிக்குக் கொடுக்கும் பிறந்தநாள் பரிசு. ஒட்டுமொத்த அரங்கமும் வேறொன்றை எதிர்பார்த்துக் காத்திருக்க அங்கே நடப்பதோ யாரும் எதிர்பாராத ஒன்று.
வெகுநாட்களுக்குப் பின் திரையில் தோன்றும் சின்னக் கலைவாணர் சற்றே ஆறுதல் அளிக்கிறார் என்பதுதான் விகடனின் விமர்சன வரியாக இருக்கும் என்பது என் அவதானிப்பு.
பாடல்கள் அனிருத்தின் வழக்கமான டெம்ப்ளேட் இசை. அதேநேரம் அனிருத்தின் இசைக்கு தனுஷின் நடனம் பிரமாதம். அவ்வளவு எனர்ஜிட்டிக். திருடா திருடி சுள்ளானில் நடித்த தனுசுக்கும் வேலையில்லா பட்டதாரி தனுசுக்கும் ஆயிரம் வித்தியாசங்கள்.
இத்தனை நாள் தனுஷ் என் பிடித்த நடிகர்களின் பட்டியலில் இல்லை. இந்தப்படத்தில் எனக்கு அவரை வெகுவாகப் பிடித்துப் போய்விட்டது. நடிப்பு பிரமாதம். சமுத்திரக்கனி மற்றும் சரண்யா பொன்வண்ணனின் நடிப்பும் அருமை.
முதல் பாதியுடன் ஒப்பிடுகையில் இரண்டாம் பாதி தொய்வு என்றே பலரும் விமர்சிக்கின்றனர். எனக்கு அப்படியொன்றும் தெரியவில்லை. படம் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை சலிப்பு தட்டாமல் தான் சென்றது. என்ன இரண்டாம் பாதி திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.
அடுத்தடுத்து என்ன நடக்கபோகிறது என்பதை கணிக்கக் கூடிய வழக்கமான திரைக்கதை தான் என்றாலும் போதுமான அளவு மசாலா தடவி பரிமாறப்பட்ட விதத்தில் சுவைக்குப் பஞ்சமில்லை. நம்பிப்போய் பார்க்கலாம்.
ரசித்த சில காட்சிகள் :
- தன்னைவிட அதிகம் சம்பாதிக்கும் தம்பிக்கு பணம் கொடுத்து உதவுவது.
- சரக்கடித்துவிட்டு சரண்யாவிடமும் அமலாபாலிடமும் கூத்தடிக்கும் காட்சிகள்.
- சமுத்திரகனி தனுஷை ஆறுதல்படுத்தும் காட்சி
- வில்லனின் அப்பாவிடம் நேருக்கு நேர் விடும் சவால்.
- அமுல்பேபியிடம் தனுஷ் பேசும் அத்தனை காட்சிகளும்.
- பத்திரிக்கையாளர்களிடம் தனுஷ் பேசும் காட்சி.
பக்கத்து வீட்டு பெண் கதாபாத்திரத்திற்கு பக்காவாக பொறுந்திருக்கும் அமலாபால் அவரது கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்துள்ளார், சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும் கதையில் மாற்றத்தை கொண்டு வரும் சுரபியின் கதாபாத்திரமும் கச்சிதம்.
படம் துவங்கியதில் இருந்தே தனுஷும் அவரை போன்ற உருவம் கொண்ட அவரது பைக் செய்யும் காமெடிகள் முதல் பாதி என்றால் இரண்டாவது பாதியின் காமெடியை அப்படியே ஆக்கிரமிக்கிறார் விவேக் அவரது பாடிலேங்வேச்சாலும், டயலாக் டெலிவிரியாலும்.
அனிருத்தின் இசையில் அனைத்து பாடல்களும் கேட்கும் விதமே குறிப்பாக அம்மா அம்மாவும், போ இன்று நீயாக என்ற பாடல் ரிபீட் ரகம், பின்னனி இசையில் பின்னி எடுத்துட்டீங்க தம்பி தாறுமாறு போங்க.
முதல் படத்தை முழுமையான கமர்சியல் படமாகவும் தற்போதைய வேலை இல்லா நிலைமையையும் கச்சிதாமாக சொல்லி உள்ள வேல்ராஜுக்கு வாழ்த்துக்கள். இருபத்தி ஐந்தாவது படத்தை புதுமுக இயக்குனரை நம்பி கொடுத்த தனுஷின் நம்பிக்கை காப்பாற்றி வெற்றி படத்தை கொடுத்த வேல்ராஜுக்கு மேலும் பாராட்டுக்கள்.
இதற்கு முன்னால் வந்த தனுஷ் படத்தில் வருவது போல ஒரு சில காட்சிகள் இருப்பதும், வில்லனை அமுல்பேபி என்று சொல்லி இறுதியில் டம்பியாக்குவது சற்று சறுக்கல், லாஜிக் பாக்காமல் பார்த்தால் படம் பட்டாசு.
மொத்தத்தில் வேலை இல்லா பட்டதாரி வெற்றிப் பட்டதாரி.