தமிழ் மற்றும் தெலுங்கு நடிகர்களை அவமதித்ததாக அனுஷ்கா மீது கடும் குற்றச்சாட்டுகள் எழுந்து அவை சமூகவலைத்தளங்களில் பெரும் பிரச்சனையாக உருவாகியுள்ளது.
அனுஷ்கா சமீபத்தில் பாலிவுட்டின் முன்னணி பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்ற கேள்விக்கு ஹிருத்திக்ரோஷன், அபிஷேக் பச்சன், ஷாருக்கான் என பதில் கூறியுள்ளார். இவர்களை தவிர தமிழ், தெலுங்கு நடிகர்களை உங்களை கவர்ந்தவர் யார் என்ற கேள்விக்கு, என்னை கவரும் அளவுக்கு எந்த தமிழ், தெலுங்கு நடிகரும் இல்லை என்று கூறியதாகவும் தெரிகிறது.
அனுஷ்காவின் இந்த பதில் தமிழ் மற்றும் தெலுங்கு படவுலகை அதிர்ச்சியடைய செய்துள்ளார். தமிழில் அஜீத், விஜய், சூர்யா, விக்ரம், கார்த்தி ஆகிய முன்னணி நடிகர்களுடனும் தெலுங்கில் அனேகமாக அனைத்து நடிகர்களுடனும் நடித்துள்ள அனுஷ்கா, தன்னை இவர்களில் ஒருவர் கூட கவரவில்லை என்று கூறியுள்ளது தமிழ் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதுகுறித்து அனுஷ்கா மீது கடும் விமர்சனங்களை ரசிகர்கள் பேஸ்புக், டுவிட்டர்களில் பதிவு செய்து வருகிறார்கள்.
மேலும் ஒரு கேள்விக்கு பதிலளித்த அனுஷ்கா, என்னுடைய உயரத்திற்கு பொருத்தமான ஜோடியை தமிழ் மற்றும் தெலுங்கில் கஷ்டப்பட்டு தேடவேண்டிய நிலை உள்ளது என்றும் கூறியுள்ளார். இது மேலும் ரசிகர்களை ஆத்திரப்படுத்தியுள்ளது.