BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Tuesday, 29 July 2014

படுக்கை அறையை சூடாக்கும் பரம இரகசியம்…!!

அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் ஒரு பொருள் வெந்தயம். வாசனைக்காகவும், சுவைக்காகவும் இதை பொதுவாகப் பயன்படுத்துவதுண்டு. இது நிறைய மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்ட ஒருவகை மூலிகை பொருளாகும். தெற்காசிய நாட்டவர்களே இதை அதிகம் பயன்படுத்துகின்றனர். ஆனால் விஞ்ஞானிகள் இதைப் பற்றிய இன்னொரு முக்கியத் தகவலை கண்டுபிடித்து வெளியிட்டுள்ளனர். இது பாலியல் உந்து சக்தியை அளிக்கக் கூடியது என்பதுதான் அந்தப் புதிய கண்டுபிடிப்பு.

ஆண்கள் இதை அதிகம் எடுத்துக் கொள்வதால் தமது இயல்பான பாலியல் சக்தியை குறைந்த பட்சம் இன்னும் 25 அதிகரித்துக் கொள்ள முடியும். 25 வயதுக்கும் 52 வயதுக்கும் இடைப்பட்ட அறுபது ஆரோக்கியமான நபர்கள் மத்தியில் இது சம்பந்தமான ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.brbrஇவர்களுக்கு ஆறு வாரங்களுக்கு தொடர்ந்து தினசரி இரு தடவை வெந்தயம் வழங்கப்பட்டது. மூன்று வாரங்களுக்குப் பின்னர் ஆறு வாரம் வரையான காலப்பகுதியில் இவர்களின் பாலியல் உணர்வுகள் பரிசோதிக்கப்பட்டன.

அப்போது இவர்களில் 28 வீதமானவர்களிடையே 16.1 முதல் 20.6 வரை வீரிய உணர்வு மேலோங்கி இருந்தது கண்டறியப்பட்டது.

இதே காலப் பகுதியில் இன்னொரு பிரிவினருக்கு பாலியல் சம்பந்தமான மாத்திரைகளும் வழங்கி அவர்களும் அவதானிக்கப்பட்டனர். அனால் அவர்களில் எந்த முன்னேற்றமும் தெரியவில்லை.


வெந்தய விதை மற்றும் கீரை ஆகிய இரண்டுமே மிகச் சிறந்தவை.இந்திய உணவுகளில் இவை பெருமளவு பளன்படுத்தப்படுகின்றன.வெந்தயத்தில் saponins எனப்படும் மூலப் பொருள் கலந்துள்ளது. இது ஆண்களின் விந்து உற்பத்தி உட்பட பாலியல் ஹோர்மோன்களைப் பலப்படுத்தக்கூடியது.

படுக்கை அறையை சூடாக்க வெந்தயம் பெரிதும் கை கொடுக்கும் என்று இந்த ஆய்வை நடத்திய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகர மருத்துவ பீட ஆய்வாளர்களே இந்த முடிவை அறிவித்துள்ளனர்.


பாலியல் குறைபாடு உள்ளவர்களுக்கு வெந்தயம் மூலம் தாங்கள் அளித்த சிகிச்சை சிறந்த பெறுபேறைத் தந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies