BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Thursday, 31 July 2014

ரஜினி குடும்பத்தில் தனுஷ்க்கு நடந்த அவமானம், விஐபியில் சகலையை வில்லனாக்கிய தனுஷ், குடும்பத்தில் குடுமிப்பிடி

ரஜினி குடும்பத்தில் தனுஷ்க்கு நடந்த அவமானம், சகலையை வில்லனாக்கிய தனுஷ், குடும்பத்தில் கும்மியடித்த வேலை இல்லா பட்டதாரி

ரஜினி குடும்பத்தில் 10வது வரை படித்த தனுஷ்க்கும் அமெரிக்காவில் ஸ்டான்போர்டு யுனிவர்சிட்டியில் எம்.பி.ஏ. படித்த  இன்னொரு மாப்பிள்ளைக்கும் இடையில் நடந்த முட்டல், மோதல் தான் "வேலையில்லா பட்டதாரி" படத்திலும் எதிரொலித்திருக்கிறதாம்.

தனுஷை ஐஸ்வர்யா காதல் திருமணம் செய்து கொண்டது ரஜினி குடும்பத்தில் நிறையை வருத்தம், மேலும் தன் கணவர் தனுஷ்க்கு உரிய மரியாதை கொடுக்கவில்லை என்ற வருத்தம் ரஜினியின் முதல் மகள் ஐஸ்வர்யாவுக்கு நிறையவே உண்டு, செளந்தர்யாவும் காதல் திருமணம் செய்து கொண்டாலும் செளந்தர்யா திருமணம் செய்தது அஷ்வின் என்கிற மிகப்பெரிய கோடீஸ்வர வீட்டுப்பிள்ளையை.

ரஜினியின் இரண்டாவது மகள் செளந்தர்யா திருமணத்திற்கு யாரோ ஒரு மூன்றாம் மனிதர்களாக தான் தனுஷ்ஷூம் ஐஸ்வர்யாவும் வந்து போனார்கள், அதிலேயே தனுஷ்ஷையும் ஐஸ்வர்யாவையும் ரஜினி குடும்பம் கொஞ்சம் தூரத்தில் வைப்பது தெரிய வந்தது, ரஜினியின் இரு மகள்களும் கடந்த இரண்டாண்டுகளாகவே மனவருத்தம் இருப்பது மீடியாவில் கசிந்தது.

இது வெளிப்படையாக தெரிந்தது ‘கோச்சடையான்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில்தான், மேடையில் தனது குடும்பத்தில் அனைவரின் பெயரையும் குறிப்பிட்டு நன்றி சொன்ன செளந்தர்யா தனது அக்கா ஐஸ்வர்யாவையும், அவரது கணவர் நடிகர் தனுஷையும் கண்டு கொள்ளவேயில்லை.

தனுஷ் நடித்து வெளியாகி ஹிட் அடித்திருக்கும்  "வேலையில்லா பட்டதாரி" திரைப்படத்தில் தனுஷை எதிர்க்கும் வில்லனின் பெயர் அஸ்வின் என இருப்பதும், ஒரு பணக்கரா பெரிய பில்டிங் காண்டிராக்டர் மகனாக வருவதும், அமுல்பேபி என அடிக்கடி நக்கலடிப்பதும் வேண்டுமென்றே சகலையை போட்டு தாக்க தனுஷ் செய்திருக்கும் வேலை என்று கருத வேண்டியுள்ளது.

ஏனெனில் செளந்தர்யாவின் கணவர் பெயரும் அஷ்வின், மேலும் அஷ்வினின் தந்தை சென்னையில் பல்லாயிரம் கோடி சொத்துமதிப்புள்ள பில்டிங் கண்ஸ்டிரக்ஷன் பிசினஸ் மேக்னேட் ஆவார். தற்போது தந்தையின் பில்டிங் கன்ஸ்ட்ரஷன் பிசினசை பார்ப்பது அஷ்வின் தான்.

இப்படி தனது கணவரை வேலை இல்லா பட்டதாரி படத்தில் கேவலப்படுத்தி தாக்கியுள்ளதை கண்டு வெகுந்த செளந்தர்யா அக்கா ஐஸ்வர்யாவுடன் கடுமையாக சண்டையிட்டுள்ளதாகவும் தற்போது பஞ்சாயத்து சூப்பர்ஸ்டாரிடம் சென்றுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன, தற்போது பெங்களூரில் ஷூட்டிங்கில் இருப்பவர் சென்னை வந்து பேசிக்கொள்வதாக கூறியுள்ளாராம்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies