BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Tuesday, 15 July 2014

ESPN பத்திரிகைக்காக இலவசமாக நிர்வாண போஸ் கொடுத்த பாஸ்கட்பால் வீரர்.

பொதுவாக உலகில் உள்ள பத்திரிகைகள் அனைத்தும் நடிகைகள் அல்லது மாடல் அழகிகளின் நிர்வாண மற்றும் டாப்லெஸ் புகைப்படத்தை அட்டையில் போடுவதற்கு ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் ESPN மாத இதழ் நேற்று வெளியான பத்திரிகையில் ஒரு ஆண் விளையாட்டு வீரரின் நிர்வாண படத்தை அட்டைப்படமாக போட்டு அனைவரையும் அதிர வைத்துள்ளது.

Serge Ibaka என்பவர் புகழ்பெற்ற பாஸ்கட்பால் வீரர். 6 அடி 10 அங்குலம் உயரமுள்ள இந்த ஸ்பானிஷ் நாட்டு வீரர் தற்போது  Oklahoma City Thunder என்ற அணிக்காக விளையாடி வருகிறார். ESPN  பத்திரிகை தனது அடுத்த இதழில் அட்டைப்படத்திற்காக நிர்வாண புகைப்படங்கள் வேண்டும் என்ற கோரிக்கையை கூறியதும் சிறிதும் தயக்கமின்றி ஒப்புக்கொண்டு நிர்வாணமாக பாஸ்கட்பால் விளையாடுவது போன்று போஸ் கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி அந்த இதழுக்கு அவர் பேட்டியும் கொடுத்துள்ளார்.

Serge Ibaka அவர்கள் தனது பேட்டியில் தான் தினமும் இரண்டு மணி நேரம் முதல் மூன்று மணி நேரம் வரை ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதாகவும், தனது உடலின் ஆரோக்கியத்திற்கு தனது உணவு வகையும், ஒழுக்கமான வாழ்க்கை முறையுமே காரணம் என்று கூறிய Serge Ibaka, நிர்வாண போஸ் கொடுத்ததற்காகவும், பேட்டிக்காகவும், ESPN  கொடுக்க முன்வந்த மிகப்பெரிய தொகையை வாங்க மறுத்துவிட்டாராம். விளையாட்டில் திறமையை மட்டுமே வளர்க்க வேண்டும். விளையாட்டை வைத்து பணம் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டால் விளையாட்டில் ஆர்வம் குறைந்து பணத்தின் மீது நமது கவனம் சென்றுவிடும் என்று கூறிய அவர் விளையாடுவதற்கு அவர் வாங்கும் சம்பளம் தவிர வேறு எந்தவித வருமானமும் தனக்கு இல்லை என்று கூறினார்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies